விளையாட்டு வினையானது

    ஒரு சோம்பேறியாக இருந்தாலும், திறமை சாலியாக இருந்தான். அவன் மனைவி நாம் இருவரும் சாப்பிடுவதற்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை.

    எங்காவது வேலைக்குச் சென்று பொருள் கொண்டு வாருங்கள் என்றார். அதற்கு அவன் என்னால் எங்கும் போக முடியாது. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.

    இறைவன் நினைத்தால் இப்பொழுது கூடக் கூரையை பிரித்து நமக்கு பணத்தைக் கொட்ட முடியும். என்னைத் தொந்தரவு செய்யாதே என்று சொன்னான். பக்கத்து வீட்டுக்காரன் இவர்களுக் கிடையே நிகழ்ந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தான்.

    இவர்களோடு விளையாட வேண்டும் என நினைத்து நூறு பொற்காசுகளை ஒரு பையில் கட்டி அவர்கள் வீட்டில் விழுமாறு தூக்கிப் போட்டான்.

    பணப்பை இருவர் முன்னாடியும் வந்து விழுந்தது. பையை எடுத்துப் பார்த்ததும் ஆ! என் வேண்டுதலுக்கு ஆண்டவன் கொடுத்துவிட்டார். இனி நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம். மனைவியிடம்

1

    என்னென்ன தேவை. உடனே வாங்கிவா என்றான். உடனே அவள் வாங்கி வந்தாள். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பணக்காரன் திகைத்து ஐயோ "விளையாட்டு வினையாகி" விடும் போல இருக்கிறதே என்று அவன் வீட்டில் நுழைந்து நடந்த வற்றை கூறி என் பணப்பையை தர வேண்டும் என்று கேட்டான்.

    அதற்கு அவன் இது எனக்கு கடவுள் கொடுத்தது. என்னை ஏமாற்ற பார்க்காதே நான் தர மாட்டேன் என்றான். பணக்காரன் அப்படியானால் நீதிமன்றத்துக்கு வா அங்கே பேசிக் கொள்ளலாம் என்றான்.

    என்னிடம் நல்ல துணிகள் இல்லை. ஏறிச் செல்ல குதிரையும் இல்லை. எப்படி நீதிமன்றத்துக்கு வருவது என்று கேட்டான். உடனே பணக்காரன் தன்னுடைய குதிரையும் துணிகளையும் கொடுத்து நீதிமன்றதுக்கு அழைத்து சென்றான்.

    வழக்குத் தொடங்கியது. நீதிபதி அவனைப் பார்த்து இவர் உன் வீட்டில் விளையாட்டுக்கு தூக்கி எறிந்த பணத்தை தரமாட்டேன் என்கிறாயாமே என்று கேட்டார்.

    ஐயா இவன் ஒரு பைத்தியம் எதுவானாலும் தன்னுடையது என்று எப்போதும் புலம்புவான்.

2

    நீங்கள் வேண்டுமானால் அவனை கேளுங்கள். நான் போட்டிருக்கும் துணிகள், ஏறி வந்திருக்கும் குதிரை இதைக்கூட தன்னுடையதுதான் என்று சொல்வான் என்றான் ஏழை.

    இதைக்கேட்ட பணக்காரன் எங்கே குதிரையும் சட்டையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் ஐயா அந்தக் குதிரை, துணிகள் எல்லாம் என்னு டையதுதான் என்று அலறினான். அவற்றை எப்படியாவது வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்றான்.

    நீதிபதி இவன் ஒரு மனநிலை சரியில்லாதவன் என்று "வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது" என்று தீர்ப்பு வழங்கினார் பணக்காரன் விளையாட்டு வினையாகி விட்டதே என மனம் வருத்தத்தோடு வீடு திரும்பினான்.

3

முந்தைய கதை
அடுத்த கதை