அரசியல் பதவி

    சிவா, ரகு அண்ணன் தம்பிகள், அவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்தனர். ராமர், லஷ்மணர் போல. அவர்களின் தாய் தந்தையர் சிறிய வயதிலேயே நோயால் இறந்து விட்டனர். தாய்மாமன் வளர்த்து ஆளாக்கினார். வாலிப வயது வந்ததும் திருமணம் செய்துவைத்து அவரவர் சொத்தை அவர்களிடம் ஒப்படைத்தார்.

    தன் வேலைகளை முடித்துக் கொண்டார். நல்ல வேலைகாரர்களாக செய்தார்கள். அதன்பின் இருவரும் குறையில்லாமல் வாழ்ந்தனர். அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்தனர்.

    அவர்களின் மனைவிகள் மிகவும் நல்லவர்கள். அதன்பின் இருவருக்கும் சிறிய சிறிய சண்டை தோன்ற ஆரம்பித்தது. இருவரும் தெருவில் சென்று ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலைமை வந்தது.

    இந்த விஷயம் பஞ்சாயத்து வரைக்கும் வந்தது. இருவரும் வேறு குடித்தனம் வைத்துக் கொண்டனர். நகை, நிலம் எல்லாம் பாகம் போட்டு பிரித்துக் கொண்டனர். ஆனால் அண்ணன், தம்பி ஒற்றுமை குறைந்து விட்டது. இப்படி இருக்கும்போது சிவா

1

    போட்டியில் நின்றான் தேர்தலில். பஞ்சாயத்துகாரர் எல்லாரும் சிவாவை தேர்தலில் நிற்க வைத்தார். தம்பி லஷ்மண் அவனுக்கு எதிராக நின்றான். அண்ணன், தம்பி மத்தியில் பிளவு அதிகமானது. எவ்வளவு பணமோ செலவழித்து சம்பாதிக்க ஆசைப்பட்டு இருவரும் செலவும் செய்யவில்லை.

    தேர்தலில் சிவா ஜெயித்தான். வாணவேடிக்கை, மாலை போட்டு வரவேற்று ஊர்வளம் நடத்தினார்கள். வீட்டு முன் நின்றிருந்தவன் தன் மீது கழுத்திலுள்ள மாலையை போட்டு ஆனந்தமாக கட்டிபிடித்து என் முன்னேற்றத்துக்கு காரணம் நீ. நீ இல்லையென்றால் நான் ஜெயித்திருக்க மாட்டேன் என்றான்.

    அவன் தன் வீட்டிலிருந்த மாலையை போட்டு உன் வெற்றி என் வெற்றி என்றான். அவன் யாருமல்ல சிவாவின் தம்பி லஷ்மண்தான். மக்கள் ஒன்றும் புரியாமல் யோசித்தனர். அண்ணன் தம்பியும் எப்படியிருந்தனர். பதவிக்காக விரோதமாக நடந்து கொண்டிருந்தனர் என்று புரிந்து கொண்டனர்.

2

முந்தைய கதை
அடுத்த கதை