ஒரு பெரிய சுடுகாட்டில் இரண்டு பேய்கள் இருந்தது. ஆண்பேய் பெண்பேய் இரண்டும் இருந்தது. ஒரு நாள் பெண் பேய் ஆண்பேயிடம் இந்த வாழ்க்கை எனக்கு வெறுத்துவிட்டது. இருக்கவே பிடிக்கவில்லை. ஊருக்குள் போய் யாரையாவது பிடிப்போம்.
நமக்கு விமோசனம் ஏற்படும் என்றது. அதற்கு ஆண்பேய் வேண்டாம். நாம் என்ன பாவம் செய்தோமோ பேயாயிருக்கிறோம். இன்னும் பாவம் செய்யாதே என்றது. இங்கேயாவது நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.
அங்கே போனால் மந்திரவாதி வந்து உன்னை குடுவையில் அடைத்து மண்ணுள் புதைத்து விடுவார்கள். அப்படியே நீ சாக வேண்டியது தான் என்றான்.
அதுகேட்காத பெண்பேய் வேண்டாம் நீ வராவிட்டால் போ நான் போகிறேன். அப்போது தான் எனக்கு விமோசனம் வரும் என்றது. அதற்கு ஆண் பேய் எப்படியாவது போ என்றது. உடனே பெண்பேய் ஊருக்குள் வந்து நடுத்தர வர்க்கம் உள்ள ராஜா என்றவரின் உடலில் புகுந்து கொண்டது.
1
அவர் மிகவும் நல்லவர். அவருக்கு 2 மகன்கள். சோமன், சுப்பன் என்ற இரு மகன்கள். ஏதோ கடனில்லாமல் நிலத்தில் சம்பாதித்து வியாபாரம் செய்து பிழைப்பவர்.
இவர் பேய் புகுந்துவிடவே என்ன செய்வதென தெரியாமல் சுயநினைவு இழந்தார். அந்த பேய் டேய் போய் எனக்கு 20 கோழி, 2ஆடு, 100முட்டை கொண்டுவா என்றது. அப்பாவை கண்டு பயந்த இருவரும் அவருக்கு கொண்டு வந்து சமைத்து வைத்தனர். சாப்பிட்டு விட்டு தினமும் இவர் தொந்திரவு அதிகமானது. வீடு, நிலம் எல்லாம் வைத்து கடன் வாங்கியாகிவிட்டது. வியாபாரம் செய்யவும் பணமில்லை. சோமனும் சுப்பனும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். என்னவென்றால் தன் தந்தையை விஷம் வைத்து கொன்றுவிடலாம் என்று பேசிக்கொண்டனர்.
இதை கேட்ட அந்த பேய் என்னால் உன் தந்தையை கொன்று விடாதீர்கள் என்று தனியே வந்து பேசியது.
அதை கண்டதும் தான் இவ்வளவு நாள் எங்களை ஆட்டிப்படைத்தாயா உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மந்திரவாதியை அழைத்து ஒழித்து விடுகிறேன் என்றனர்.
2
ஐயோ என்னை விட்டு விடுங்கள். நான் ஓடி போய் விடுகிறேன். இனி வரவே மாட்டேன் என்று சுடு காட்டை நோக்கி ஓடிப்போய் அந்த ஆண்பேயிடம் சேர்ந்து கொண்டது.
ராஜா சுயநினைவு வந்து தனக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டான். நடந்ததை மகன்கள் விவரித்தனர்.
நானா இப்படி சாப்பிட்டேன் என்று அவர் உடல் நலம் சரியில்லாமல் அஜீரணமாகி புண்ணாகி மருத்துவரிடம் அழைத்து போய் குணப்படுத்தி பழையபடி சந்தோஷமாக வேலை செய்து வாழ்க்கை நடத்தினர்.
3