சாம்பாரில் தங்கம்

    வஞ்சியூரில் முத்து என்ற ஏழை இருந்தான். அவன் தந்தை பணக்காரராகத் தான் இருந்தார். ஆனால் ஏதோ வியாபாரம் செய்து அதில் நஷ்டம் வரவே அவர் மனம் உடைந்து இறந்து போனார். அப்போது முத்துவுக்கு நான்கு குழந்தைகள்.

    அவனுக்கு அவ்வூரில் வேலை செய்து பிழைக்க முடியாமல் இருந்தது. அதுவரை கெளரவமாக வாழ்ந்து விட்டு அதே ஊரில் கூலி வேலை செய்யப் பிடிக்கவில்லை.

    அதனால் அவன் தன் மனைவி மக்களோடு வேறு ஊருக்குச் சென்றான். அங்கு என்ன கஷ்டப்பட்டு வேலை செய்த போதிலும் குடும்பம் நடத்தப் போதிய பணம் கிடைக்கவில்லை.

    ஒரு நாள் முத்துக்கு எந்த வேலையுமே கிடைக்கவில்லை. ஏற்கனவே அவன் பலரிடம் கடன் வேறு வாங்கிவிட்டான். அதனால் யாரிடமும் கடன் கேட்கவும் முடியவில்லை. அவனுக்குப் பசியோ வயிற்றைக் கிள்ளியது. அன்று தன் மனைவி மக்களுக்கு எப்படி சாப்பாட்டிற்கு வழி செய்வது என்ற கவலை வேறு சேர்ந்து கொண்டது. அவன் ஊரெங்கும் திரிந்தபோது ஒரு பணக்காரர் வீட்டில்

1

    கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. சமையல் நடக்கும் இடத்தை மறைக்கத் தட்டி கட்டப் பட்டிருந்தது சமையல் வாசனை முத்துவின் மூக்கைத் துளைத்தது.

    கல்யாண வீட்டிற்குள் முத்துவினால் வாசல் வழியாகச் செல்ல முடியாது. ஏனெனில் அவனது அழுக்கான கிழிந்த ஆடைகள் அவன் அக் கல்யாணத்திற்குக் சம்பந்தப்பட்டவனல்ல என்று காட்டிக் கொடுத்துவிடும். எனவே பின்புறமாகப் போய் சமையல் நடக்கும் இடத்தில் கட்டப்பட்ட தட்டி ஒன்றை விலக்கிக் கொண்டு யார் கண்ணிலும் படாமல் சென்றான்.

    அங்கே ஓரிடத்தில் இனிப்புத் தின்பண்டங்கள் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றை எடுத்து முத்து வாயில் போட்டுக் கொள்ளப் போனான். அப்போது அங்கு யாரோ வரவே அவன் சட்டென அங்கிருந்த பெரிய சாம்பார் அண்டாவின் பின்னால் ஒளிந்துக் கொண்டான்.

    வந்தவள் சந்றுப் பருமனான நடுவயதுப் பெண்மணி. அவள் அங்கும் இங்கும் பார்த்தவாறே சாம்பார் அண்டா அருகே நின்றாள். அப்போது சற்று தூரத்திலிருந்து யாரோ ஒருவர் முத்தம்மா! வரும்போது கத்தரிக்காய் கறிப்பாத்திரத்தை

2

    எடுத்துவா என்று குரல் கொடுத்தார். முத்தம்மாவும் இதோ கொண்டு வருகிறேன் என்று கூறியவாறே தன் மடியிலிருந்து ஏதோ சிலவற்றை எடுத்துச் சாம்பார் அண்டாவினுள் போட்டாள்.

    அதை அண்டாவின் பின்னால் மறைந்திருந்த முத்து கவனித்து விட்டான் அவள் ஏதோ அந்த வீட்டில திருடி எடுத்து வந்து வைத்திருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்து போனது. அவள் அங்கிருந்து போனதும் இன்னொரு திண்பண்டத்தை எடுக்கப் போனான். அதை யாரோ பார்த்து விட்டான். அவன் உடனே "திருடன், திருடன்" என்று கத்தவே சிலர் ஓடி வந்து ஓட முயன்ற முத்துவைப் பிடித்துக் கொண்டார்கள்.

    அவர்கள் அவனை அந்த வீட்டு எஜமானனின் முன் நிறுத்தினார்கள். அவனிடம் அவர்கள் இவன் திருட்டுத் தனமாகச் சமையற்கட்டில் புகுந்து விட்டான். இவன் இனிப்புத் திண்பண்டங்களை திருட முயன்ற போது இவனை நாங்கள் கையும் களவுமாகப் பிடித்து விட்டோம் என்றார்கள்.

    எஜமானரும் நீங்கள் அசகாய சூரர்கள்தான். யாரோ ஒருவர் ஒரு இனிப்புத் திண்பண்டத்தை எடுத்ததைப் பெரிய திருட்டு என்று கண்டுபிடித்து விட்டீர்களோ என்று கேலியாகக் கூறினார்.

3

    அப்போது முத்து ஐயா! நான் திருடன் இல்லை. நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன். இன்று எனக்கு எந்த வேலையுமே இல்லை. பசியால் துடி துடிக்கும் ஏழை நான். உங்கள் சமையல் கட்டிலிருந்து வந்த வாசனை என்னை இங்கு வரை இழுத்து வந்து விட்டது என்றான்.

    வீட்டு எஜமானரும் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு சமையல் வாசனை உன்னை இழுத்தாலும் யாருக்கும் தெரியாமல் நீ உள்ளே வந்தது தவறுதானே என்று கூறி

    அவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு தட்டில் தனக்கு உணவையும் மற்றொரு தட்டில் முத்துவுக்கு உணவையும் கொண்டு வந்து வைக்கும்படி வேலையாளிடம் கூறினார். அவர் முத்துவை சாப்பிடச் சொல்லி தானும் அவன் முன் உட்கார்ந்து சாப்பிட்டார்.

    அவன் சாப்பிட்டு முடித்ததும் அவர் உனக்கு ஏன் சாப்பாடு போட்டேன் தெரியுமா? என்று கேட்டார். முத்து கண்களில் நீர் கசியத் தனக்குக் தெரியாது என்று தலையை ஆட்டினான்.

    எஜமானரும் சாதம் சுவாமிக்குச் சமம். அதைத் திருடிச் சாப்பிடும் நிலை எந்த மனிதனுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது. உன்னைப் பார்த்தால்

4

    திருடிப் பழகியவனாகத் தெரியவில்லை. இந்த நிலை உனக்கு எப்படி ஏற்பட்டது? என்று பரிவுடன் கேட்டார். அப்போது முத்து தன் தந்தை வியாபாரம் செய்து நஷ்டம் மடைந்து மனம் உடைத்து செத்துப் போனதைக் கூறினான். அதன் பின் தான் பணம் இல்லாமல் கஷ்டப்படுவதையும் தன் ஊரை விட்டே வெளியேறி இந்த ஊருக்கு வந்ததையும் இங்கும் குடும்பத்தைக் காப்பாற்ற பணம் கிடைக்கவில்லை என்றும் கூறினான்.

    அதைக் கேட்ட எஜமானர் பெரு மூச்சு விட்டு வியாபாரம் என்றால் லாபம் தான் வரும் நஷ்டம் வராது என்று எண்ணம் கூடாது. இப்போதுள்ள நிலை உன்னைத் திண்படத்தைத் திருட வைத்தது. நாளை உன் குழந்தைகள் இப்போது நீ செய்வது போலவே திருட்டுத் தொழிலில் இறங்கும் அபாயம் இருக்கிறது.

    இன்று உன் பசியை தீர்த்தேன். நாளைக்கு வா உனக்கு ஏதாவது வேலை போட்டு கொடுக்கிறேன். இப்போது உன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் சாப்பாடு கட்டி எடுத்து கொண்டு போ என்றார்

    அப்போது முத்து நீங்கள் எனக்கும் என் குடும்பத்தவருக்கும் உணவு கொடுத்தீர்கள். அதற்கு மிக்க நன்றி ஆனால் சமையல் எப்படி இருக்கிறது.

5

    கேட்கவில்லையே? என்றான். அதைக் கேட்ட எஜமானார் ஆச்சரியமே அடைந்தார். அவன் அப்படி கேட்டதற்கு ஏதோ ஒரு உட்பொருள் இருக்கிறது என நினைத்தார். எனவே அவர் சற்று யோசித்து சரி நீயே சொல் சமையல் எப்படி இருக்கிறது? என்று கேட்டார். அவனும் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் சாம்பாரில் மட்டும் தங்கம் இருப்பது போல தெரிகிறது. என்றான்.

    "அவரும் சாம்பாரில் தங்கமா?" என்று ஆச்சரியத்துடன் கேட்கவே முத்து தான் ஒளிந் திருந்தபோது வேலைக்காரி செய்ததை கூறினான். உடனே எஜமானர் சமயற்கட்டிற்கு போய் சாம்பார் அண்டாவில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். அதிலிருந்து நாலுவடச் சங்கிலி கிடைத்தது அவர் உடனே வேலைக்காரியை கூப்பிட்டு விசாரிக்கவே அவள் திருடியதை ஒப்பு கொண்டாள். திண்பண்டம் திருட வந்த முத்து உண்மையான திருடியை கண்டுபிடித்து கொடுத்ததில் வீட்டு எஜமானர் பரம திருப்தி அடைந்தார். அவர் மறுநாளே முத்துவுக்கு வேலை போட்டு கொடுத்து அவன் குடும்பம் கஷ்டப்படாதபடி பார்த்து கொண்டார்.

6

முந்தைய கதை
அடுத்த கதை