முன்னொரு சமயம் நமி என்னும் அரசன் மிதிலையைத் தலைநகராகக் கொண்டு விதேக நாட்டை ஆண்டு வந்தான். அவன் பல போகங்களில் அளவுக்கு மீறி ஈடுபட்டதால் அவனுக்குக் கொடிய ஜீரம் வந்தது தினம் நிறைய சந்தனத்தை அரைத்துத் தடவ வேண்டுமென்று வைத்தியர் கூற இந்தக் காரியத்தைத் தாங்கள் செய்வதாக ராணிகள் முன் வந்தனர்.
ராணிகள் சந்தனம் அரைக்கும் போது கை வளையல்கள் ஓசை ஏற்பட்டது அரசனுக்கு வேதனையாக இருந்தது. வளையல்கள் ஒன்றோ டொன்று உரசி, ஓசை ஏற்படுத்தியதால் கைக்கு ஒரு வளையல் மாத்திரம் வைத்துக் கொண்டு மற்ற வளையல்களை அவர்கள் கழற்றி வைத்துவிட்டனர்.
ஆகவே அடுத்த நாள் அவர்கள் சந்தனம் அரைக்கும்போது ஓசையே கேட்காமல் போகவே அரசன் ஏன் இன்று சந்தனம் அரைக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு ராணிகள் வளை ஓசை தங்களுக்கு வேதனையளிப்பதால் கைக்கு ஒரு வளை வைத்துக் கொண்டு மற்ற வளையல்களை அவிழ்த்து வைத்து விட்டோம்.
1
கைக்கு ஒரு வளையாக இருப்பதால் அவை ஓசை எழுப்பவில்லை என்று சொன்னார்கள். இதைக் கேட்டதும் அரசருக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. வளை கையில் தனிமையாக இருக்கும் போது சண்டை சச்சரவின்றி இன்பமாக இருக்கிறது.
ஆகவே தனிமையான துறவு வாழ்க்யைில் தான் இன்பம் இருக்கிறது என்று தீர்மானித்து, தம் போக வாழ்க்கையை விட்டுத் துறவியானார்.
2