மனம் மாறியது

    மலையூர் முருகன் பட்டணத்து அரசாங்க அலுவலகம் ஒன்றில் வேலை செய்து வந்தான். தினமும் காலையில் தன் ஊரிலிருந்து காட்டு வழியே போய் பட்டணம் அடைந்து அலுவலகத்தில் வேலை செய்து விட்டு மாலையில் தன் ஊருக்குத் திரும்பி வருவது வழக்கம். சிறுவயதில் தந்தையை இழந்த அவனை அவனது தாய்தான் மிகவும் சிரமப்பட்டு வளர்த்துப் பெரியவனாக்கினாள்.

    முருகன் மிக நன்றாகப் பாடக் கூடியவன். ஒரு நாள் இரவு அவனது தாய் பாட்டைக் கேட்டவாறே உயிர் நீத்தாள். இதனால் அவன் உலகில் தனியாக விடப்பட்டான். அவன் மனம் எதிலும் நாட்டம் கொள்ளவில்லை.

    ஏதோ சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் போய் வரலானான். அவன் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட அவனது நண்பர்கள் நீ ஒரு கல்யாணத்தை செய்து கொள் என்று யோசனை கூறினார்கள்.

    கல்யாணம் என்று கேட்டதும் அவன் கண் முன் நின்றவள் அடுத்த வீட்டு தேவகிதான். அவள் தந்தை ஒரு வியாபாரி. அவரது ஒரே மகள் என்பதால் தேவகி தன் இஷ்டப்படி வளர்ந்தாள்.

1

    அவள் தினமும் அவ்வூர் கோயிலுக்கு மாலை வேளையில் போய் வருவாள். கோயிலுக்குப் போகுமுன் முருகனின் வீட்டின் எதிரே உள்ள நந்தவனத்திற்குப் போய் பூப்பறித்து எடுத்து செல்வாள்.

    முருகன் அவளைப் பார்த்த போதிலும் அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. ஆனால் ஒரு நாள் மாலை அவன் துணிச்சலுடன் அவள் முன் போய் நின்று நான் உன்னை விரும்புகிறேன். நீ என்னை மணந்து கொள்கிறாயா? என்று கேட்டுவிட்டான்.

    அதைக் கேட்ட தேவகி திகைத்துப் போனாள். ஆனால் மறுவினாடியே தன்னை சமாளித்துக் கொண்டு உனக்குப் பாடத் தெரியுமே யொழிய வீரச் செயல்களைப் புரிய முடியுமா? பணக்காரன் என்று தலை நிமிர்ந்து நிற்கமுடியுமா? உன் அழகை எப்போதாவது கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா? இனிமேல் என்னிடம் இந்த மாதிரிப் பேசாதே என்று போய்விட்டாள்.

    முருகன் பதில் பேச நினைத்தும் அவனால் முடியவில்லை. ஏனெனில் தேவகி அங்கே இல்லையே. அவனுக்கு அது பெருத்த அவமான மாகப்பட்டது. வாழ்க்கை இனி எதற்கு என எண்ணி

2

    அங்கிருந்து காட்டை நோக்கி நடந்தான். நிலவொளியில் அவன் அங்கே ஒரு பாறை மீது அமர்ந்து தன் தாயை நினைத்து மனம் உருகிப் பாடலானான்.

    அவன் பாட்டை முடித்தபோது சற்று தூரத்திலிருந்த மரத்திலிருந்து மூன்று பிசாசுகள் பேஷ்! பேஷ்! பாட்டு மிக நன்றாக இருக்கிறதே என்று கை தட்டியவாறே அவன் முன் வந்து நின்றன. வாழ்க்கையை வெறுத்துவிட்ட முருகன் அவற்றைக் கண்டு பயப்படவில்லை.

    அவை உன் பாட்டு நன்றாக இருந்தாலும் அதில் சோகரசமே ததும்பியது. மகிழ்ச்சியைத் தரும் விதமாய் ஒரு பாட்டு பாடு என்று கூறின. முருகனும் மகிழ்ச்சியா? அது இனி என் வாழ்வில் இல்லை. அதனால் அப்படிப்பட்ட பாட்டு பாட முடியாது என்றான்.

    அது கேட்டு அப்பிசாசுகள் இந்த இளம் வயதிலேயே உனக்கு வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்பட்டு விட்டதா? அது ஏன் என்று கேட்டன. முருகனும் தான் தேவகியிடம் பட்ட அவமானத்தைக் கூறினான். அப்போது பிசாசுகள் தமக்குள் ஏதோ பேசிக்கொண்டன. பிறகு அவை அந்த தேவகி மகா கர்வம் பிடித்தவள் போல் தெரிகிறது கவலைப்

3

    படாதே. அவளை உனக்குக் கல்யாணம் செய்து வைப்பது எங்கள் பொறுப்பு. இப்போது நீ போய்விட்டு அடுத்த பெளர்ணமியன்று வந்து எங்களைப் பார் என்றன. முருகனுக்கு அவற்றின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை ஏற்படாது போனாலும் அவன் அங்கிருந்து சென்றான்.

    மறுநாள் மாலை தேவகி நந்தவனத்திற்கு மலர் பறித்துக் கொண்டு கோயிலுக்குப் போனாள். அங்கிருந்து அவள் திரும்புகையில் ஓர் முயலை ஒரு சிறுத்தைப் புலி துரத்திக் கொண்டு வருவதைக் கண்டாள். முயல் வேகமாக ஓடி எங்கோ பதுங்கிக் கொண்டது.

    அப்போது சிறுத்தைப் புலிக்கு தேவகி தென்படவே அவள் மீதுப் பாய்ந்தது. ஆனால் அப்போது திடீரென்று முருகன் ஓடிவந்து அந்தப் புலியைக் கத்தியால் தாக்கிக் குத்திக் கொன்றான்.

    தேவகி அப்போது மனதில் ஆகா! முருகன் இவ்வளவு அசகாயசூரனா என நினைத்து ஆச்சரியப்பட்டாள். அவள் அவனுக்கு நன்றி சொல்வதற்குள் அவன் அங்கிருந்து போயே விட்டான். அவள் ஆபத்தில் உதவியவருக்கு நன்றி கூடச் செலுத்த முடியவில்லையே என்று எண்ணியவாறே வீட்டை அடைந்தாள். அவள்

4

    போனதும் முயலும் சிறுத்தைப் புலியும், முருகனும் பிசாசுகளாகி பேஷ் நம் திட்டம் நன்கு யெல்படுகிறது என்று கூறி மகிழ்ந்தன.

    மறுநாள் தேவகி கோவிலுக்குப் போய்விட்டு வந்தபோது முன்தினம் காலியாக இருந்த இடத்தில் அப்போது ஒருஅழகிய மாளிகை இருப்பதைக் கண்டாள். அவள் அது எப்போது கட்டப்பட்டது என்று திகைத்து நிற்கையில் அம்மாளிகையிலிருந்து முருகன் வாசலுக்கு வந்து அங்கே இருந்த வேலைக்காரனிடம் ஏதோ சொல்லிவிட்டு போனான். அதைக் கண்ட தேவகி அந்த வேலைக்காரன் அருகே போய் இந்த மாளிகை யாருடையது என்று கேட்டாள்.

    இது முருகன் அய்யா வீடு பழைய வீடு பிடிக்காததால் இதைக்கட்டி இங்கே வந்து விட்டார் என்றான் அவன். ஒரே நாளிலா இதைக் கட்டினார்? என்று அவள் கேட்க அவனும் முருகன் அய்யாவின் சக்தி சாமர்த்தியங்கள் அறிந்தவர்கள் இந்த மாதிரிக் கேட்க மாட்டார்கள் என்று கூறிவிட்டு மாளிகைக்குள் போய்விட்டான்.

    தேவகியும் இதென்ன அதிசயம் என்று எண்ணியவாறே தன் வீட்டை அடைந்தாள். அவள் போன சற்று நேரத்தில் மாளிகையில் முருகனும் வேலைக்காரனும் பிசாசுகளாக மாறி பேஷ் அவள்

5

    மனம் மாறுகிறது என்று சொல்லி மறைந்து போயின. தேவகி அன்றிரவு முழுவதும் முருகனின் தீரச் செயலையும் அவனுக்கு இருக்கும் செல்வத்தையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தூக்கமே வரவில்லை. மறுநாள் மனநிலை சரியாக இல்லாததால் அவள் கோயிலுக்குப் போகவில்லை.

    அவள் சற்று காற்றுவாங்க முருகனின் வீட்டின் எதிரே இருந்த நந்தவனத்திற்குள் சென்றாள். அங்கு மூன்று அழகிய பெண்களைக் கண்டு அவள் திகைத்துப் போய் நீங்கள் எல்லாம் யார்? என்று கேட்டாள்.

    அவர்களும் நாங்கள் மூவரும் இணைபிரியா நண்பர்கள். மூவரும் இவ்வூரில் உள்ள முருகனைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறோம். ஆனால் அவர் எங்களில் யாரைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்பது தெரிந்தால் மற்ற இருவரும் அத்திருமணத்திற்கும் தடையாக இருக்கமாட்டோம். அதோ எதிரில் தெரிவதுதானே முருகனின் வீடு என்று அவளிடம் கேட்டார்கள்.

    தேவகியும் அவருடைய வீடு தான் அது. ஆனால் இப்போது அதில் அவர் இல்லை. ஆமாம் இவ்வளவு அழகாக இருக்கும் நீங்கள் போயும் போயும் அழகே இல்லாத இந்த முருகனையா

6

    கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்? என்று கேட்டாள் வந்த மூன்று அழகிகளும் மூன்று பிசாசுகளும் மூவரில் ஒருத்தி சிரித்தவாறே அட பைத்தியக்காரியா இருக்கிறாயே புற அழகா அழகு! ரொம்ப அழகானவன் என்று என் அக்கா நிறைய வரதட்சனை கொடுத்து கல்யாணம் செய்து கொண்டாள் ஒருவனை. ஆனால் அவன் ஒரு விபத்தில்.... என்றாள்.

    அதற்கு மற்றொருத்தி வேண்டாம் அந்த கோர சம்பவத்தை கூறாதே. என் சிநேகிதி பணக்காரன் என்றும் அழகன் என்றும் எண்ணி ஜமீன்தாரின் மகனை மணந்து கொண்டாள். அவனோ ஒரு குடிகாரன் தினமும் குடித்து விட்டு அவளை அடிக்கிறான். அப்புறம் என்று..... ஏதோ சொல்லப் போனாள்.

    அதை மூன்றாவது அழகி இடை மறித்து இப்போது அந்தக் குடிகாரன் பேச்சு எதற்கு என் பெரியம்மாவின் பேத்தி மகாமன்மதன், அழகன் என்று வாட்டசாட்டமான ஒருவனோடு ஒடிப்போய் அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். ஆனால் அவன் வீட்டிற்குப் போனதும் அவளை வேலைக்காரிப் போலத்தான் நடத்தினான் என்றாள்.

    அப்போது தேவகியே போதும் நீங்கள் சொல்ல வந்தது முருகன் அழகாக இல்லாது போனாலும்

7

    நற்குணங்கள் படைத்தவன் என்றுதானே. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாகி விட்டது. நீங்கள் ஏமாந்து திரும்ப வேண்டியதுதான் என்றாள்.

    மூவரும் ஆச்சரியப்படுவது போல் கல்யாணம் நிச்சயமாகிவிட்டதா? யார் அந்தப் பெண் என்று கேட்டனர். தேவகியும் வேறு யாருமில்லை நான்தான் நீங்கள் போய் வருகிறீர்களா? என்று கூறிச் சட்டெனத் தன் வீட்டிற்கு ஓடிப்போனாள்.

    மூன்று பிசாசுகளுக்கும் ஒரே மகிழ்ச்சி தம் திட்டப்படி தேவகி மனம் மாறி முருகனை மணக்கத் தீர்மானித்து விட்டாள். என்று அவை திருப்தி அடைந்தன. அவை ஆந்தைகளாக மாறிப் பறந்து போயின. அடுத்த பெளர்ணமியன்று அவை முருகனை முன்பு சந்தித்த பாறையருகே வந்து நின்றன.

    முருகன் தேவகியோடு அங்கு வந்தான். தேவகி அப்பிசாசுகளிடம் நீங்கள் மூவரும் என் கர்வத்தை ஒழித்து எனக்கு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தீர்கள். அதற்கு மிக்க நன்றி என்றாள்.

    அப்பிசாசுகளும் இந்த சுபகாரியம் இவ்வளவு விரைவில் நடந்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி இனி

8

    முருகன் மகிழ்ச்சி தரும் மதுர கீதம் பாட வேண்டும். நாங்கள் கேட்டு ரசிப்போம் என்றன. உடனே முருகன் பாட ஆரம்பித்தான் உடனே தேவகியும் சேர்ந்து பாடினாள். பிசாசுகள் அந்த இசையில் மெய்மறந்து நின்றன.

9

முந்தைய கதை
அடுத்த கதை