ஓர் ஊரில் வேலன் என்ற ஒருவன் இருந்தான். அவன் முட்டாளாக இருந்ததால் யாரும் வேலை தரவில்லை. வேலை தேடி வெளியூர் சென்றான் அவன். அங்கே பணக்காரன் ஒருவனைச் சந்தித்தான் அவன். ஐயா நீங்கள் எந்த வேலை கொடுத்தாலும் பொறுப்பாகச் செய்வேன்.
கொடுக்கும் கூலியை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்வேன் என்றான். என் வீட்டு வேலைகளைச் செய்ய உன்னைப் போல ஒரு ஆளைத் தேடிக் கொண்டிருந்தேன். என்னுடன் வா என்று அவளை அழைத்துச் சென்று வேலை கொடுத்தான்.
மறுநாள் பொழுது விடிந்தது. முக சவரம் செய்து கொள்ள நினைத்தான் பணக்காரன் சோப்பு, தண்ணீர், முகம் பார்க்கும் கண்ணாடியுடன் அமர்ந் தான் அவன். தவறுதலாக அவன் கால் பட்டு கண்ணாடி கீழே விழுந்து பல துண்டுகளாக உடைந்தது.
வேலைக்காரனை அழைத்த அவன், "இந்தா ஒரு பணம். நான் முக சவரம் செய்து கொள்ள வேண்டும். என் முகம் பார்க்கும் கண்ணாடியை உடனே வாங்கி வா. பக்கத்திலேயே நிறைய கடைகள் உள்ளன, ஓடு" என்றான் அவன்.
1
உடனே வாங்கி வருகிறேன் என்று வேகமாகப் புறப்பட்டான் அவன். முக சவரம் செய்து கொள்ளக் காத்திருந்தான் பணக்காரன். நீண்ட நேரமாகியும் வேலையாள் வரவில்லை.
எரிச்சல் அடைந்த அவன் பக்கத்திலேயே பல கடைகள் உள்ளன. எல்லா கடைகளிலும் கண்ணாடி கிடைக்கும். ஏன் இவன் இன்னும் வாங்கி வரவில்லை? என்று அங்கும் இங்கும் உலாவினான். நண்பகல் நேரம் வந்தது. வேர்க்க விறுவிறுக்க வேலன் அங்கு வந்தான்.
ஏன் இவ்வளவு நேரம்? எந்த வேலையும் செய்யாமல் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேன் முகம் பார்க்கும் கண்ணாடி வாங்கி வந்தாயா? என்று கோபத்துடன் கேட்டான் பணக்காரன்.
ஐயா உங்கள் முகம் பார்க்கக்கூடிய கண்ணாடியை வாங்கி வரச் சொன்னீர்கள். இந்த ஊரில் உள்ள எல்லா கடைகளிலும் தேடி விட்டேன். எந்தக் கடையிலும் அப்படிப்பட்ட கண்ணாடி கிடைக்கவில்லை.
எல்லாக் கண்ணாடிகளையும் நானே எடுத்துப் பார்த்தேன். அதில் என் முகம் தானே தெரிகிறது. உங்கள் முகம் அதில் தெரியவில்லை. உங்கள் முகம்
2
தெரியாத கண்ணாடியில் நீங்கள் எப்படி முக சவரம் செய்து கொள்வீர்கள்? அதனால் எந்தக் கண்ணாடியும் வாங்காமல் இங்கு ஓடி வந்து விட்டேன். நான் என்ன செய்வது? சொல்லுங்கள் என்று கேட்டான் வேலன்.
"இப்படிப்பட்ட ஒரு முட்டாளுக்கு வேலை கொடுத்தேனே" என்று தன் தலையில் அடித்துக் கொண்ட அந்த பணக்காரன் அன்றே அவனை வேலையை விட்டு விரட்டிவிட்டான்.
3