கலிபோர்னியா நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவனுக்கு திடீரென பைத்தியம் பிடித்துவிட்டது. நான் ஒரு பசு. என்னைக் கொன்று என் மாமிசத்தை உண்ணுங்கள். உடனே கத்தியைக் கொண்டு வாருங்கள். என்னை வெட்டுங்கள் உண்ணுங்கள் என்று கத்திக் கொண்டே இருந்தான்.
தன்னைப் பசுவாக நினைத்துக் கொண்ட அவன் சாப்பாடு போட்டால் சாப்பிடுவது இல்லை "என்னை எப்பொழுது கொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டுக் கொண்டே இருப்பான்.
அரண்மனை மருத்துவர்கள் அரசர் உணவு உண்டால் அதில் மருந்தை கலந்து கொடுத்து எப்படியும் மூன்று மாதத்திற்குள் குணப்படுத்தி விடலாம். ஆனால் அரசர் எதையும் சாப்பிட மாட்டேன் என்கிறாரே எனன செய்வது? என்று அரசியிடம் கூறினார்கள்.
அரசிக்கு வழி ஒன்றும் தெரியவில்லை. உடனே அவள் சிறந்த அறிஞரும், புலவருமான அவிசென்னியை அழைத்து நடந்ததை எல்லாம் சொன்னாள். "அரசியாரே! கவலைப்படாதீர்கள்" என்று கூறிவிட்டு பைத்தியம் பிடித்த அரசரை பார்க்கச் சென்றார்.
1
அவரைக் கண்டதும் அரசன், "நான் ஒரு பசு. நீயாவது என்னை அறுத்துத் தின்னு" என்று கூறினார். உடனே அவிசென்னி நீ பசு என்பது தெரியாமலா இங்கு வந்திருக்கிறேன். நான் யார் தெரியுமா? கசாப்புக் கடைக்காரன்.
உன்னை அறுத்து கூறு போடவே வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு "எங்கே இந்தப் பசுவை அறுப்பதற்கு கத்திக் கொண்டு வாருங்கள் என்று அரண்மனையின் உட்புறம் நோக்கிக் குரல் கொடுத்தார்.
இதைக் கேட்டதும் அரசன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவிசென்னிக்கு முன்னால் தன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பலியாவதற்குத் தயாராக நின்றான்.
அவிசென்னி, இந்தப் பசு இப்படி நின்றால் பத்தாது. அதன் நான்கு கால்களையும் கட்டி மற்ற பசுக்கள் வெட்டப்படும் இடத்திற்கு தூக்கி வாருங்கள் என்று காவலர்களைப் பார்த்துக் கட்டளை இட்டார். நடந்ததை எல்லாம் உண்மை என்று நம்பிய அரசன் நான் நன்கு சாப்பிட்டால் தான் தன்னை வெட்டுவார்கள் என்று நினைத்தான்.
அன்றிலிருந்து உணவை விரும்பி அதிமாக சாப்பிட்டான்.
2
உணவில் கலந்து இருந்த மருந்து வேலை செய்யத் தொடங்கியது. சில மாதங்களில் அரசன் பைத்தியம் தெளிந்து பழைய நிலைக்கு வந்து விட்டார். எல்லோரும் அவிசென்னியின் அறிவுத் திறமையைப் புகழ்ந்துப் பேசி பாராட்டினார்கள்.
3