ரகுராம் என்பவனின் மகன் பாஸ்கர். அவன் 10 ஆம் வகுப்பு படிக்கிறான். அங்கு ஒரு பையன் வந்து பாஸ்கர் உன் அப்பா குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடக்கிறார் என்று சொன்னான். மற்ற எல்லா பிள்ளைகளும் அவனை ஏளனமாக பார்த்தார்கள்.
பாஸ்கருக்கு இதே கவலை. அதனால் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தந்தை இப்படி பணத்தை கரியாக்கி தன் கெளரவத்தையும் இழந்து கொள்கிறாரே என்ன சொல்வதென புரியாமல் அவன் தந்தையை தூக்கி ரிக்க்ஷாவில் அழைத்து போய் வீட்டில் விடுகிறான்.
அவனுக்கு புதிதாக சேர்ந்த மாணவன் சிவசங்கர் தான் நெருங்கிய நண்பன். அவன் வகுப்பில் எப்போதும் முதல் ராங்க் வருவான். அவன் பாஸ்கரிடம் வந்து என்ன பாஸ்கர் ஏதோ கவலையாக இருக்கிறாயே என்ன விஷயம் என்றான்.
ஒன்றுமில்லை என்றான். இல்லை நான் உன் நண்பன் தானே என்னிடம் சொல் என்றான். தன் தந்தையை பற்றி சொன்னான். பின்னர் இருவரும் சேர்ந்து விஸ்வநாத் என்ற மருத்துவரிடம் சென்றனர்.
1
தன் தந்தையைப் பற்றி சொல்லி அவருக்குள் நல்ல மாற்றம் ஏற்பட உதவுமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் ஒப்புக் கொண்டார். அவன் தந்தையின் காலில் அடிபட்டு புண் பெரிதாக இருந்தது. அதனால் டாக்டரிடம் செல்லலாம் என சொல்லி அழைத்து வந்தான் விஸ்வநாதிடம்.
அவர் சிகிச்சை அளித்து விட்டு என்ன ரகுராம் குடிப்பாயா, சிகரெட் பிடிப்பாயா என்று கேட்டார். உன்மேல் வாடை வருகிறதே என்றார். ஆம் எப்போதாவது குடிப்பேன் என்றான். அதனால் தான் உன் உடம்பில் இரத்தம் மொத்தம் கெட்டுவிட்டது. மாற்ற வேண்டும். இப்படியே போனால் இன்னும் 6 மாதத்தில் நீ இறந்து விடுவாய் என்றார்.
இதைக் கேட்டதும் ரகுராம் வெளிறிப் போனான். பயந்து போய் எனக்கு நல்வழி காட்டுங்கள். நான் உயிருடன் இருக்க வேண்டும். இனிமேல் குடிக்கவே மாட்டேன். இன்றிலிருந்து இப்போதே விட்டு விடுகிறேன் என்றான்.
டாக்டர் சிகிச்சை அளித்து நல்ல குணமாகி குடிப்பதை நிறுத்தி விட்டான். பின்னர் பாஸ்கரும் படிப்பில் அதிக கவனம் செலுத்தி முதல் மாணவனாக சிவசங்கரின் நல்ல நண்பனாக இருந்தான்.
2