ஓர் ஊரில் சரவணன் ஒருவன் இருந்தான். பணத்தாசை பிடித்த அவன் முட்டாளாகவும் இருந்தான். வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு ஒருவன் வந்தான். அவனிடம் அழகான கிளி ஒன்று இருந்தது.
அந்தக்கிளி யார் என்ன கேட்டாலும் "அதிலென்ன சந்தேகம்" என்று மட்டும் சொல்லும்படி அதைப் பழக்கி வைத்திருந்தான் அவன். அந்தக் கிளியை வைத்து சரவணனை ஏமாற்ற நினைத்தான் அவன். தன் திட்டப்படி இரண்டு மூன்று இடங்களில் பொற்காசுகளைப் புதைத்து வைத்தான்.
கிளியை எடுத்துக் கொணடு நேராகச் செல்வனிடம் சென்ற அவன், "இந்தக் கிளி அபூர்வமான கிளி. பூமியில் எங்கெங்கே புதையல் இருக்கிறது என்று கண்டு பிடித்துச் சொல்லிவிடும்" என்றான். சரவணனால் அவன் பேச்சை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
"இந்த ஊரில் எங்கெங்கே புதையல் இருக்கிறது என்று உன் கிளியால் சொல்ல முடியுமா?" என்று கேட்டான் சரவணன். "என்ன இப்படிக்கேட்டு வீட்டீர்கள். உங்கள் வயலில் புதையல் இருக்கிறதா. இல்லையா என்று இப்பொழுதே பார்த்துவிடுவோம்".
1
என்று சரவணனுடன் புறப்பட்டான் அவன் ஏற்கெனவேதான் பொற்காசுகளைப் புதைத்து வைத்த
இடத்தைக் கிளியிடம் காட்டி," இந்த இடத்தில் புதையல் இருக்கிறதா?" என்று கேட்டான் அவன். "அதிலென்ன சந்தேகம்" என்றது கிளி. உடனே இவன் அந்த இடத்தைத் தோண்டினான். பொற் காசுகள் கிடைத்தன.
வியப்படைந்த சரவணன்," இன்னும் ஏதேனும் இடத்தில் புதையல் இருக்கிறதா என்று கிளியைக் கேள்" என்றான். மற்றோர் இடத்தைக் காட்டிய அவன் "இங்கே புதையல் இருக்கிறதா?" என்று கேட்டான். வழக்கம் போலக்கிளியும்," அதிலென்ன சந்தேகம்?" என்றது. அந்த இடத்தை தோண்டிய அவனுக்குப் புதையல் கிடைத்தது.
மூன்றாவதாக ஒரு இடத்தையும் காட்டிப் புதையல் இருக்கிறதா? என்று கேட்டான். இப்பொழுதும் கிளி வழக்கம் போல "அதிலென்ன சந்தேகம்" என்றது. அங்கும் தோண்டப் புதையல் கிடைத்தது. நடந்ததை எல்லாம் பார்த்த சரவணன், "இங்தக் கிளி புதையல் எங்கு இருந்தாலும் காட்டும் போலிருக்கிறது.
எப்படியாவது இவனை ஏமாற்றி இதை விலைக்கு வாங்க வேண்டும்" என்று நினைத்தான்."
2
இந்தக் கிளியை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?" இதை எனக்குத் தந்து விடு. நான் உனக்கு ஆயிரம் பொன் காசுகள் தருகிறேன்" என்று தேனொழுகப் பேசினான் சரவணன்.
தன் திட்டம் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ந்தான் அவன்." பெரியவராகிய நீங்கள் கேட்டு வீட்டீர்களே. என்பதற்காகத் தருகிறேன். இதனிடம் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் புதையல் இருக்கிறதா என்று கேட்காதீர்கள்" என்று சொல்லிக் கிளியை அவரிடம் தந்தான்.
பொற்காசுகளைப் பெற்று கொண்டு புறப் பட்டான் மறுநாள் பொழுது விடிந்தது. கிளியை எடுத்துக் கொண்டு தன் வயலுக்கு வந்தான் சரவணன். அங்கே ஓரிடத்தைக் காட்டி "இங்கே புதையல் இருக்கிறதா?" என்று கேட்டான்.
"அதிலென்ன சந்தேகம்' என்றது கிளி. புதையல் கிடைக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் அந்த இடத்தில் பெரிய பள்ளம் தோண்டினான். ஆனால் புதையல் ஏதும் கிடைக்கவில்லை.
ஏமாற்றம் அடைந்த அவன் இன்னோர் இடத்தைக் காட்டி "இங்கேயாவது புதையல் இருக்கின்றதா?" என்று கேட்டான். வழக்கம் போலக் கிளியும், "அதிலென்ன சந்தேகம்" என்றது.
3
அங்கு எவ்வளவோ ஆழம் தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. கடுப்படைந்த அவன், "இப்படி என்னை இரண்டு முறை ஏமாற்றி விட்டாயா? உன்னை ஆயிரம் பொற்காசுகளுக்கு வாங்கி நான் பெரிய முட்டாளாகி விட்டேன்" என்றான். அதைக் கேட்ட கிளி தன் இயல்பு மாறாமல் "அதிலென்ன சந்தேகம்" என்றது.
4