நகரத்தில் வாழ்பவர்கள் நாட்டுப் புறத்தில் வாழும் பெண்ணைத் திருமணம் செய்து தருமாறு கேட்டு திருமண தினத்தையும் குறித்து விட்டார்கள். இவ்வாறு நாளை முடிவு செய்துவிட்டு தங்கள் குடும்பக் குருவிடம் சென்று நாங்கள் குறிப்பிட்டு இருக்கும் நாள் திருமணம் செய்யப் பொருத்தமான நாளா? என்று கேட்டார்கள்.
தன்னிடம் முதலில் கேட்காமல் நாளை நிச்சயப்படுத்திவிட்டு பொருத்தமான நாளா என்று பிறகு அவர்கள் தன்னைக் கேட்டது குருவுக்குப் பிடிக்கவில்லை.
ஆகவே திருமணம் நடைபெறாமல் தடுத்துவிட அவர் எண்ணினார். எனவே அந்த நாள் பொருத்த மாகாத நாள் அன்று என்றும், அன்று திருமணம் நடந்தால் அதனால் கடுமையான தீமைகள் விளையக் கூடும் என்று சொன்னார்.
சோதிடர் சொன்னதின் பொருட்டு கிராமம் செல்லாமல் நகரவாசிகள் நகரத்தில் தங்கி விட்டார்கள். நகர வாசிகள் திருமணத்துக்கு வராதது குறித்து, கிராமவாசிகள் தங்களுக்கு இடையே பேசிக்கொண்டார்கள். திருமணத்துக்குத் தேதியை அவர்கள்தான் நிச்சயித்தார்கள்.
1
ஆனால் அவர்கள் வராமல் இருந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் யாரோ என்று பேசிக்கொண்டு அந்தப் பெண்ணை வேறு ஒருவனுக்கு மணம் முடித்துவிட்டார்கள். மறுதினம் நகரவாசிகள் வந்து பெண்ணைத் திருமணம் செய்து தரும்படி. கிராமவாசிகளைக் கேட்டார்கள்.
அதற்குக் கிராமவாசிகள் நகரவாசிகளான உங்களிடம் பொது ஒழுங்கு முறையே இல்லை. திருமண நாளை நிச்சயித்தவர்கள் நீங்கள்தான் பெண்ணை அழைத்துப் போக நீங்கள் வரவில்லை
நீங்கள் வராமல் இருந்துவிட்டதால் பெண்ணை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டோம் என்று சொன்னார்கள்.
உடனே நகரவாசிகள் நாங்கள் எங்கள் குருவைக் கேட்டோம். நாள் நன்றாக இல்லை என்று அவர் சொன்னார். அதனால்தான் நாங்கள் நேற்று வரவில்லை. இன்று பெண்ணை அழைத்துப் போகவந்தோம் என்று சொன்னார்கள்.
இதைக் கேட்டதும் கிராமவாசிகள் சரியான நேரத்துக்கு நீங்கள் வரவில்லை. பெண் வேறு ஒருவனுக்கு உரியவன் ஆகிவிட்டாள். அவளை எப்படி இரண்டாம் முறையாக நாங்கள் திருமணம் செய்து தரஇயலும் என்று சொன்னார்கள்.
2
இவர்கள் இப்படிச் சக்கரவிட்டுக் கொண்டிருந்த சமயம் அறிஞர் ஒருவர் வியாபாரத்தின் பொருட்டு நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்திருந்தார். நாள் நல்ல நாளாக இல்லை என்று தங்கள் குரு சொன்னதாகவும் கிரகநிலை சாதகமாக இல்லாததால் தான் தாங்கள் வரவில்லை என்றும் நகரவாசிகள் விவரத்தைச் சொன்னார்கள்.
அதற்கு அவர் கிரகங்கள் என்ன செய்யும் பெண்ணை அடைவதுதான் அதிர்ஷ்டமான காரியம் என்று சொன்னார்கள். அதனால் பெண்ணை திருமணம் செய்யாமல் நகரவாசிகள் திருப்பினார்கள்.
3