முன்னாளில் சிங்கிபுரம் என்னும் நாட்டை வீரேந்திரன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அறிவாற்றல் மிக்க அமைச்சர்களும், வல்லமை மிக்க படைத்தலைவர்களும் அவனுடைய அரசவையில் இருந்தனர். அவர்களுடைய உதவியால் தன்னுடைய நாட்டை வலிமை மிக்கதாக உருவாக்கினான்.
பல போர்கள் புரிந்தான். பணியாத அரசர்கள் பலர் அவன் காலடியில் வீழ்ந்தனர். மாமன்னன் என்ற பெயர் பெற்றான். நாட்டு மக்கள் குறையேதும் இன்றி வாழ்ந்தனர். மன்னனைப் புகழ்ந்து பாராட்டினர்.
மன்னன் வீரேந்திரனுக்கோ ஒரு குறை, தம் வம்சம் தழைக்க, ஓங்க ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை வாட்டியது. குழந்தைப் பேற்றுக்காக மன்னன் திருக்கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தான். தருமங்கள் செய்தான். விரதங்கள் மேற்கொண்டான்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிக்க மகிழ்ச்சி பொங்க நாட்டு மக்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டு மகிழ்ந்தான். குழந்தையைச் சீராட்டி, பாராட்டி வளர்ந்தனர்.
1
அரசிளங்குமரனுக்கு மூன்று வயது நிரம்பியது. மன்னருக்கு மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. மன்னன் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தான். பல தருமகாரியங்ளைச் செய்தான்.
அரச கருவூலம் காலி ஆனது. அமைச்சர்கள் முதலியோர் அரசனுடைய போக்கைக் கண்டு முனுமுனுத்தனர் அதிருப்தி அடைந்தனர். இந்தச் சமயத்தில் பக்கத்து நாட்டு அரசன் கார்த்திகேயன் திடீரெனப் படையெடுத்து சிங்கிபுரம் கோட்டைக்குள் நுழைந்தான்.
முற்றுகையைத் தொடங்கி கோட்டையைக் கைப்பற்றினான். ஆயினும் கார்த்திக்கேயன் வீரேந்திரன் மீது இரக்கம் கொண்டு, அவனையும், அவனது பட்டத்து ராணி, இரண்டு குமாரர்களையும் நாட்டின் எல்லைக்கு அப்பால் கொண்டுபோய் விட்டான்.
நாட்டை இழந்த வீரேந்திரன் மனைவி, மக்களுடன் வேறு நாட்டைச் சென்று அடைந்தான். உடல் தேய கடுமையாக உழைத்து மனைவி மக்களைக் காப்பாற்றி வந்தான். ஏழு வயது நிரம்பிய மூத்த மகனையும் நான்கு வயது நிரம்பிய இளைய மகனையும் பார்த்து வீரேந்திரன் கவலை அடைந்தான். "நாடு இழந்தேன், மணிமகுடம் இழந்து நாடோடி ஆனேன்.
2
என் மகன்களாவது சிறப்பாக வாழவேண்டாமா? ராஜ பரம்பரையில் தோன்றிய என் மகன்கள் காடாள்வதா? என் வாழ்நாள் விரைவில் முடிந்து விடலாம், அதன் பின் அவர்கள் கதி என்ன ஆகும்? அரசபீடத்தில் அமரக் கூடியவாறு, அரசியல் அறிவுடன், சகல கலைகளையும் போதித்து விட்டால் அவர்கள் சிறப்புடன் வாழ்வார்கள் என்று எண்ணினான்.
அதற்காக வேண்டிய தகுந்த குரு ஒருவரைத் தேடி அலைந்தான் வீரேந்திரன். நாட்கள் பல கழிந்தன. ஒரு கிராமத்தில் சகல கலைகளிலும் வல்லவரான அந்தணர் ஒருவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு சகல கலைகளையும் சாஸ்திரங்களையும் போதித்து வருவதைக் கேள்விப்பட்டான்.
தனது இரண்டு குமாரர்களையும் அழைத்துக் கொண்டு அந்தணரின் ஆசிரமத்திற்குச் சென்றான். அவரை வணங்கி தன்னுடைய சோகக் கதையைக் கூறினான் வீரேந்திரன்.
வீரேந்திரனின் சோக வாழ்க்கையும் அவனது விருப்பத்யைும் தெரிந்து கொண்ட அந்தணர், "மன்னனே" எனக்குத் தெரிந்த கலைகள் அனைத்தையும் உன் பிள்ளைகளுக்கு கற்றுத் தருகிறேன்.
3
குரு காணிக்கையாக என்ன தருவாய் என்று கேட்டார். "குருவே நிர்க்கதியாக நிற்கும் என்னிடம் குரு காணிக்கை செலுத்த எதுவும் இல்லையே" என்றான் வீரேந்திரன். "குரு காணிக்கை பெறாமல், கலைகளைப் போதிப்பது சாஸ்திர முறைக்கும் பொருத்தம் ஆகாது.
மேலும், என் குலம் தழைக்கவும், என் கலைகளை உலகறியச் செய்யவும் எனக்கு ஒரு புத்திரன் இல்லையே என்ற குறைபாடு உண்டு" என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார் குருவான அந்தணர்.
குரு காணிக்கையாக ஒரு மகனைத் தந்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தான் வீரேந்திரன். அவன் கூறியதை ஏற்ற அந்தணர், "மன்னனே உன் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் கற்பித்த கலைகள் பயனற்றது ஆகிவிடும்" என்று எச்சரித்தார் அந்தணர்.
மேலும், "மன்னனே உன் புத்திரர்களுக்கு வேண்டிய வித்தைகளை கற்பித்த போதிலும். அவை பயன் பெறுவது அவரவர் வினையைப் பொறுத்தது" என்று சூட்சமமாகக் கூறிய அந்தணர் அவர்கள் ஆசிரமத்தில் இருந்து பயிற்சி பெறட்டும்.
4
உரிய வயதை அடைந்ததும் நீ வந்து ஒருவரை எனக்கு காணிக்கையாகக் கொடுத்து விட்டு உனக்கு வேண்டியவர்களை அழைத்துச் செல்.
அதுவரை மாணவர்கள் இருவரும் பெற்றோரைப் பார்க்கக் கூடாது என்றார். அந்தணரை வணங்கி தன் புத்திரர்களை அவரிடம் ஒப்படைத்து விட்டு துயரத்தோடு விடை பெற்றுச் சென்றான் வீரேந்திரன்.
குருதேவரான அந்தணர் கலைகளிலும் சாஸ்திரங்களிலும் வல்லவர். ஆனால் சுயநலமும் சூழ்ச்சியும் கொண்டவர். அவரது உள்ளத்தில் நயவஞ்சகமும் உருவானது. இருவரில் எவரைத் தமக்குக் காணிக்கையாகத் தருவான் என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் அந்தணர்.
மூத்த மகனையே பெற்றோர் விரும்புவது வழக்கம். இளையவனையே மன்னன் தமக்குக் காணிக்கையாகத் தருவான். எனவே இளையவனே தனக்கு உரியவன். அவனுக்கே வித்தைகளையும் கலைகளையும், சாஸ்திரங்களையும் போதித்து வல்லவனாகச் செய்ய வேண்டும் என்று ஒருவாறு தீர்மானித்தார் குரு.
தினமும் ஆசிரமத்தைப் பெருக்குவது சாணத்தால் மெழுகுவது, பசுக்களை மேய்ப்பது.
5
காட்டுக்குப் போய் விறகு வெட்டிக் கொண்டு வருவது, யாகத்துக்குத் தீ வளர்க்க சுள்ளிகளைப் பொறுக்கி வருவது, குருவுக்கு உடலைப் பிடித்து விடுவது, துணிகளைத் துவைப்பது இன்னும் இது போன்ற வேலைகளைச் செய்யுமாறு மூத்தவனை ஏவினார் குரு. அவனுக்கு எந்த வித்தையும் போதிக்காமல் அவனை மூடனாகவே வளரச் செய்தார் குரு.
வேதங்கள், சாஸ்திரங்கள், மந்திர தந்திர மாயாஜால வித்தைகள் ஆகியவற்றை இளைய வனுக்குக் கற்றுக் கொடுத்தார். இந்திர ஜாலம், மகேந்திர ஜாலம், கூடுவிட்டுக் கூடு பாய்தல் முதலான அரிய வித்தைகளில் குரு தேர்ச்சி பெற்றிருப்பதை உணர்ந்த இளையவன், அவற்றைக் தானும் கற்றுக் கொள்ள ஆசைப் பட்டான்.
தனது விருப்பத்தை இளையவன் குருவிடம் கூறினான். இவ்வுலகில் எவர்க்கும் அஞ்சாது. இணையற்று விளங்கும் படியான வித்தைகள் ஏதேனும் உண்டா? என்று குருவைக் கேட்டான்.
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை ஒன்று உள்ளதென்றும், அந்த வித்தையைக் கற்றவனை எவராலும் வெல்ல முடியாதென்றும் குரு கூறினார். "குரு தேவரே கூடுவிட்டுக் கூடு பாய இயலுமா?" என்று கேட்டான் இயைவன்.
6
உலகில் உள்ள ஜிவராசிகளின் உடல் கூடுகள் வேறே தவிர ஆண்டவன் படைப்பில், அனைத்து உயிர்களும் ஒன்று தான்.
உயிர் மூச்சுப் பயிற்சி மூலம் ஓர் உடல் கூட்டிலிருந்து மற்றொரு உடல் கூட்டுக்குள் தன் உயிரைப் புகுத்திக் கொள்ளும் படியான வித்தையே கூடு விட்டுக் கூடு பாய்தல் ஆகும்.
அதோடு மனத்தத்தவ சாஸ்திரம் கற்று, வரப் போவதை முன் கூட்டியே உணரும்படியான ஞானதிருஷ்டியையும் ஒருவன் கற்றுத் தேறுவானே யானால் அவனை வெற்றி கொள்ள இவ்வையகத்தில் எவராலும் இயலாது என்று கூடுவிட்டுக் கூடுபாய்தல் வித்தையை விவரித்தார் குரு.
நயமாகப் பேசி குருவின் நம்பிக்கைக்கு முழு பாத்திரம் ஆகி விட்டான் இளையவன். தன்னிடம் இருப்பவன் என்பதால், கூடு விட்டுக் கூடுபாயும் வித்தையையும் ஞான திருஷ்டி முறையையும் இளையவனுக்கு கற்றுக் கொடுத்து விட்டார் குரு.
சகோதரர்கள் இருவரும் உரிய வயதை அடைந்தனர். இளையவன் எல்லாவற்றையும் கற்றறிந்தவன் ஆகையால் குருவின் விருப்பத்திற் கேற்ப அவருக்கு பணிவடை செய்தான். ஆனால் தனது அண்ணனுக்கு கல்வி அறிவு ஏதும் வேதங்களை
7
போதிக்காமல் குரு தேவர் நடந்து கொள்வது அவனுக்குப் பிடிக்கவில்லை.
தன் அண்ணனை எடுபிடி வேலைகளுக்கும் பயன்படுத்தி வரும் குருவின் உள்நோக்கம் பற்றி இளையவன் சிந்திக்கத் தொடங்கினான்.
மூடனாக வளர்க்கப்பட்ட மூத்தவனை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு, தன்னை குருதேவர் தன் காணிக்கையாக எடுத்துக் கொள்ள சுய நலத்தோடு சூழ்ச்சி செய்கிறார் என்பதை உணர்ந்தான்.
தன் பெற்றோர்கள் இருவரின் ஒருவரைத் தேர்வு செய்யும் போது குருதேவர் எவ்வாறு நடந்து கெள்வார் என்பதை ஞானதிருஷ்டியால் நோக்கி னான் இளையவன்.
பெற்றோர்கள் ஆசிரமத்திற்கு வந்ததும் மூத்தவனைக் கற்றிந்தவனைப் போல் அலங்கரித்து மேற்பார்வையாளரைப் போல அமர்ந்து இருக்கச் செய்வார். குருதேவர் இளையவனைத் தண்ட னைக்கு உள்ளானவனைப் போல் முழங்காளிட்டு அமரச் செய்வார்.
பெற்றோர்கள் மூத்தவனையே விரும்பி ஏற்பர். இளையவனைத் தம்மிடம் விட்டு விடுவர். இதுதான் குருதேவரின் தந்திரம் என்று உணர்ந்தான். மனம்
8
உடைந்த இளையவன் தன்னுடைய பெற்றோர்கள் இருக்கும் இடத்தை ஞானதிருஷ்டி யால் நோக்கினான். பெற்றோர்கள் ஒரு நகரத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதையும், தங்களது விமோசனத்திற்கே கற்றுத் தேர்ந்த மகனையே பெரிதும் நம்பியிருப்பதையும் உண்ர்ந்தான்.
இரவு ஆசிரமத்தில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையினால் கருடன் உருவம் எடுத்துப் பறந்து சென்று பெற்றோர் இருக்கும் நாட்டை அடைந்து,ஒரு சத்திரத்தில் அனாதைகளாகப் படுத்திருந்த பெற்றோர் களைத் தட்டி எழுப்பினான்.
இருவரையும் குருவிடம் ஒப்படைத்த காலம் முதல் அதுவரை நடந்த சேதிகளை ஆதியோடந்த மாக விளக்கிக் கூறினான் இளையவன். குருவின் நயவஞ்சகத்தை விபரமாகக் கூறினான். நாடாள ணே்டியவனை மூடனாக ஆக்கி விட்டானே பாவி என்று எண்ணி குருவின் மீது வெறுப்பைக் கக்கினர் பெற்றோர்.
கவலைப் படாதீர்கள் சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும். ஆசிரமத்திற்கு உடனே புறப்பட்டு வாருங்கள். யார் வேண்டும் என்று குரு கேட்டார். இளைய மகன் தான் வேண்டும் என்று சொல்லுங்கள்.
9
பிறகு ஆக வேண்டியதைப் பார்ப் போம் என்று கூறிய இளையவன் கருட வேடம் பூண்டு ஆசிரமத்தை அடைந்தான்.
வீரேந்திரனும் அவனது மனைவியும் ஆசிரமத்திற்கு வந்தனர். கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்றவனான ரெிய பிள்ளை எங்கள் சொற்படி கேட்டு நடக்க மாட்டான். என்றும் மூடனான இளையவனையே நாங்கள் விரும்புகிறோம் என்று குருவிடம் வீரேந்திரன் கூறினான்.
எதிர்பாராத திருப்பத்தைக் கண்ட குரு திடுக் கிட்டார். மோசம் போய்விட்டோமே என்று மனம் புழுங்கினார். பெற்றோருடன் இளைய மகன் சென்று விட்டான். அடுத்து செய்ய வேண்டிய சூழ்ச்சித் திட்டத்தில் குரு ஆழ்ந்து விட்டார். வீரேந்திரனும், அவனது மனைவியும் இளைய மகனும் ஒரு நகரத்தை அடைந்தனர்.
இரவு நேரம் வந்தது. பசி மயக்கத்தில் இருந்த இளையமகன் தாயிடம் உணவு கேட்டான். இந்த இரவு மட்டும் பொறுத்துக் கொள் மகனே விடிந்ததும் பிச்சை எடுத்து வந்து உணவு தருகிறேன் என்று தாய் கூறினாள்.
தாயின் ஏக்கம், வேதனையை உணர்ந்த இளைய மகன் "நான் இருக்க கவலை வேண்டாம்" என்று ஆறுதல் கூறினான்.
10
இந்த நகரத்தில் தங்கபாலு என்னும் செல்வந்தனுக்கு பஞ்சகல்யாணி குதிரை ஒன்று தேவைப்படுகிறதாம்.
நான் உருமாறிக் கொள்கிறேன் என்று கூறி அழகான பஞ்சக்கல்யாணி குதிரையாக உருமாறி னான் இளையவன். வீரேந்திரன் குதிரையைக் குளக்கரைக்குக் கொண்டு வந்தான். அங்கு வந்த தங்கபாலு மகன் குதிரையை விலைக்குக் கேட்டான்.
"ஆயிரம் பொன்" என்று விலை கூறினான் வீரேந்திரன். வீரேந்தினை குதிரையுடன் தந்தை யிடம் அழைத்துச் சென்றான். தங்கபாலு தனது குருவிடம் குதிரையைக் காட்டி "விலைக்கு வாங்கலாமா?" என்று கேட்டான்.
தனது ஞான திருஷ்டியால் இளையவன் எங்கெங்கு எப்படி இருப்பான் என்பதை அவனது குருதேவர் உணர்ந்து கொண்டிருந்தார். அந்தக் குருதேவர் தான் இப்போது பஞ்சக் கல்யாணிக் குதிரையைத் தடவிக் கொடுத்து, இது மாயக் குதிரை ஏறிச் சவாரி செய்தால் உன் மகன் திரும்பி வரமாட்டான்" என்று தங்கபாலுவிடம் கூறினான்.
தனது ஒரே மகனை இழக்க விரும்பாத தங்கபாலு "குருவே ,நீங்கள் சொன்னதை நிருபித்துக் காட்டினால் தான் என் மகன் நம்புவான்" என்று கூறி
11
தனது மகனது பிடிவாத குணத்தை குருவிடம் விளக்கினான்.
தன்னிடமே வித்தைகள் பல கற்று, தனக்குத் துரோகம் இழைத்துவிட்டு குதிரை உருவில் இருப்பவன் இளைய ராஜ குமாரன் என்பதை குரு உண்ர்ந்து கொண்டார்.
கடிவாளத்தைப் பிடித்து குதிரை மீது ஏறி உட்கார்ந்தார் குரு. தன்மீது சவாரி செய்பவர் தனது குருதேவர்தான் என்பதை இளையவன் உணர்ந்து கொண்டான். திடீரென வானத்துக்கும் பூமிக்கும் தாவி குருவைத் தலை குப்புற விழ வைக்க இளையவன் முயன்றான். கடிவாளத்தை இறுக்கிப் பிடித்து குதிரயை அடக்கி கீழே விழாமல் இறங்கினார்.
இந்தக் காட்சியைக் கண்டதும் தங்கபாலுவின் மகன் நடுங்கிவிட்டான். தங்கபாலு திகைப்படைந்து "குருவே ஆயிரம் பொன்னை குதிரைக்காரனிடம் கொடுத்து விடுகிறேன் குதிரையை நீங்கள் ஆசிரமத்திற்குக் கொண்டு செல்லுங்கள்" என்று கூறினான்.
குதிரையோடு ஆசிரமத்திற்கு வந்த குரு, அதனைக் கொல்லக் கருதி, சேறும் சகதியும் நிரம்பிய தண்ணீரைக் காண்பித்தார்.
12
குருவின் துரோக எண்ணத்தை உணர்ந்த குதிரை வடிவில் இருந்த ராஜகுமாரன் தண்ணீர் குடிப்பது போல பாவனை செய்தான்.
தன் உயிரை குளத்தினுள் கிடந்த ஒரு செத்துக் கிடந்த மீனுக்குள் புகுத்திக் கூடு பாய்ந்து குதிரை நின்ற படியே உயிர் அற்றுக் கீழே விழுந்தது.
அதைக் கண்டு திகைத்த குரு. தனது சீடர்களை அழைத்தான். குளத்து நீரை இறைத்து எல்லா மீன்களையும் கொன்று விடுமாறு கட்டளையிட்டார். சீடர்களும் அவ்வாறே செய்யத் தொடங்கினார்கள். மீன் உருவில் இருந்த ராஜகுமாரன் உயிர் பிழைக்க வழி தேடினான்.
அப்போது அருகில் இருந்த மரத்தடியில் ஒரு பஞ்சவர்ணக் கிளி செத்துக் கிடந்தது.மீன் உருவில் இருந்த ராஜகுமாரன் பஞ்சவர்ணக் கிளியின் உடலில் புகுந்தான். ஞான திருஷ்டியால் இதனை உணர்ந்த குரு, அருகில் செத்துக் கிடந்த கழுகினுள் தன் உயிரைப் புகுத்தினார்.
வெறியுடன் கழுகு கிளியைத் துரத்தியது. காடு மலைகளைக் கடந்து கிளி ஒரு நகரத்தை அடைந்தது. கழுகும் துரத்திக் கொண்டே சென்றது. அப்போது, அரண்மனைக் கன்னி மாடத்தில் அழகே உருவான அரசிளங்குமரி சாளரங்களைத் திறந்து
13
வைத்துக் கொண்டு தனக்கு வரப் போகும் நாயகனை நினைத்து, கற்பனை உலகில் மிதந்திருந்தாள், கிளி சாளாரத்தின் வழியாகப் பறந்து ராஜகுமாரியின் மடியில் போய் விழுந்தது.
கற்பனை உலகிலிருந்து விடுபட்ட ராஜகுமாரி கிளியை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். அதைக் கண்டதும் கழுகு உருவில் இருந்த குரு," துரோகியே எட்டு நாளில் உன்னைக் கொல்கிறேன் பார்,"என்று கூறிக் கொண்டு வந்தவழியே பறந்து சென்றார்.
அழகான பஞ்சவர்ணக் கிளியை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பாசத் துடன் வளர்த்து வந்தாள் ராஜகுமாரி. கிளியுடன் பேசுவதிலே ஓர் ஆனந்தம்.
அதை தொட்டுத் தடவிக் கொடுப் பதிலே ஓர் இன்பம் அவளுக்கு நவரத்தினம் பதித்த தங்கக் கூண்டு தயாரித்து கிளியை அதில் அடைத்து வைத்தாள்.
ஒரு நாள் இரவு, வெண்ணிலா ஒளி வீசியது. கிளிக்கு பாலும், பழமும் ஊட்டினாள்.கன்னி மாடத்து கதவுகள் மூடிவிட்டு பஞ்சணையில் சாய்ந்தாள். சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள். நடு இரவில் மயக்க நிலையில் காணப்பட்டாள்.
14
அந்தக் காட்சியைக் கண்ட கிளி தன் மூக்கினால் கூண்டுக் கதவைத் திறந்து வெளியே வந்து ராஜகுமாரன் உருவுக்கு மாறியது. ராஜகுமாரன் ஓசை படாமல் நடந்து சென்று இளரசியின் பஞ்சணையில் அமர்ந்தான்.
அவளுடைய தூக்கத்தைக் கலைக்காமல் ஆசை ததும்ப கூந்தரை வருடி,அவளது மலர்க் கன்னத்தில் முத்த மழை பொழிந்தான். இரவு முழுவதும் அவளுடன் இருந்தான். பொழுது புலரும் சமயம் கிளி உருக் கொண்டு பறந்து கூண்டுக்குள் சென்றான்.
ஆனந்த மூர்ச்சையிலிருந்து இளவரசி. விழிக்கலானாள். கூந்தல் கலைந்து அலங்கோல மாகக் கிடந்ததைக் கண்டு திகைப்படைந்தாள். பஞ்சணை முழுவதும் மலர்கள் கசங்கிக் கிடந்தன. தலையணைகள் தாறுமாறாக கிடந்தன.
இளவரசி ஒன்றும் புரியாமல் திகைப் படைந்தாள். கட்டுக் காவலை மீறி மாயக் கள்வன் புகுந்திருப்பானோ? இந்தக் கள்ளத் தனத்தை தானாகவே கண்டுபிடிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.
இன்று இரவு தூங்காமல் இருந்து அவனைக் கையும் களவுமாகப் பிடிக்க உறுதி பூண்டாள். அறைக்கு வெளியே காவல் புரியும் பணிப்
15
பெண்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் படி கட்டளையிட்டாள்.கதவுகளை உட்புறம் மூடித் தாளிட்டாள். தூண்டா மணி விளக்கைத் தூண்டி விட்டாள். பஞ்சணையில் படுத்தாள்.
போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்குவது போல பாவனை செய்தாள். கிளி உருவில் இந்த ராஜகுமாரன் அவள் முகத் திரையை விலக்கினான். மங்கலான விளக் கொளியில் மேகத்திலிருந்து வெளிப்படும் நிலவைப் போல இளவரசியின் முகம் ஒளி வீசியது. அவள் மெதுவாக புரண்டுபடுத்தாள். புன் முறுவலுடன் ராஜகுமாரன் அவளது கூந்தலை வருடினான்.
உடனே இளவரசி துள்ளி எழுந்தாள். ராஜகுமாரனின் கைகளை இறுகப் பிடித்து யார் நீ? இன்று கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாய். கிளியாக வந்து கன்னிமாடத்தில் புகுந்து கனவில் வந்து, கற்பைக் கவர்ந்து மறையும் மர்மம் என்ன? உன்னைப் பார்த்தால் ராஜகுமாரனைப் போல் தெரிகிறதே, உண்மையைக் கூறு என்றாள்.
ராஜகுமாரன் தன் பிறப்பு, வளர்ப்பு, நாட்டை இழந்தது, குருவிடம் வித்தை கற்றது, குருவின் குரோத எண்ணம் அனுபவித்த துன்பம் அனைத் தையும் மிக விரிவாகக் கூறினான். கிளியாகப் பறந்தது. எட்டு நாட்களில் என்னைக் கொல்வதாகத் குரு
16
செய்துள்ள சபதத்தை இளவரசிடம் கூறினான். ராஜகுமாரன், கன்னி மாடத்துக்கு வெளியே என்னைக் கொண்டு வரச் செய்து கொல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினான்.
"அது எப்படி முடியும்?" என்றாள் இளவரசி.
"உன் தந்தைக் கழைக் கூத்துக்களில் பிரியர். ஆதலால் குரு கழைக் கூத்தாடி வேடம் தரித்து வந்து அரிய வித்தைகளைக் காட்டுவார். அதைப் பார்த்து மகிழ்ந்த அரசர், உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று குருவைக் கேட்பார்.
கன்னி மாடத்தில் இருக்கும் பஞ்சவர்ணக் கிளி வேண்டும் என்று குரு சொல்வார்." என்று குருவின் சூழ்ச்சித் திட்டத்தை ராஜகுமாரியிடம் விவரித்தான் ராஜகுமாரன்.
"உன் தந்தைக் கிளியைக் கேட்டு வற்புறுத் தினால், கோபத்தோடு கிளியின் கழுத்தைத் திருகிக் கொன்று விடு. அதன் பின் உன் முத்து மாலையைக் கேட்பார்கள்.
மேலும் கோபம் கொண்டவள் போல், முத்து மாலையை அறுத்து உதிர்த்து கன்னி மாடத்துக்கு வெளியே முற்றத்தில் இறைத்து விடு. அப்புறம் நடப்பதைப் பார்" என்று ராஜகுமாரன் திட்டம் வகுத்துக் கொடுத்தான்.
17
கிளியைக் கொல்ல கழுகு வைத்த கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. எட்டாம் நாள் காலை கழைக் கூத்தாடி வேடம் தரித்து குரு அரசவைக்கு வந்தார்.
நூறு அடி உயரம் கம்பம் நட்டு அதில் ஏறி அரிய பல சாதனைகளை நிகழ்த்தினார் குரு. வியப் படைந்த அரசன் 'உனக்கு என்ன பரிசு வேணடும்' என்று கேட்டான்.
இளவரசியார் வளர்த்து வரும் பஞ்சவர்ணக் கிளி வேண்டும் என்றார் குரு. இளவரசி கொடுக்க மறுத்தாள். மன்னருக்கு சினம் ஏற்பட்டது. கிளியைக் கொண்டுவரும் படி சேவகர்களுக்கு உத்தரவிட்டான். கிளியைப் பிடித்து அதன் கழுத்தை திருகி எடுத்துச் செல்லுங்கள் என்று சேவகர்களிடம் செத்த கிளியைக் கொடுத்தாள் இளவரசி.
செத்தக் கிளியைப் பார்த்து குரு திடுக்கிட்டார். செத்த கிளி எனக்கு எதற்கு என்று கூறிய குரு, இளவரசி அணிந்திருக்கும் முத்து மாலையைப் பரிசாகக் கேட்டார். கன்னிப் பெண் அணிந்திருப் பதை அந்நியனுக்குக் கொடுப்பதா எனச் சீற்ற மடைந்தவள் போல் நடித்த இளவரசி முத்து மாலையை அறுத்து உதிர்த்து கன்னி மாடத்துக்கு வெளியே முற்றத்தில் வீசி எறிந்தால் நாலாப் பக்கமும் சிதறிக் கிடந்த முத்துக்களைப் புழுக்கள்
18
ஆக்கி அதற்குள் புகுந்து விளையாடுகிறான் ராஜகுமாரன் என்பதைப் புரிந்து கொண்ட குருநாதர் கோழி வடிவம் எடுத்து புழுக்களைக் கொத்தத் தொடங்கினார்.
குருவைக் காட்டிலும் வல்லமை படைத்த ராஜகுமாரன் பூனை வடிவம் எடுத்து கோழியின் கழுத்தைக் கவ்விக் கொண்டான்.
இதனைச் சற்றும் எதிர்பாராத குரு, பூனை உருவில் இருந்த ராஜகுமாரனை நோக்கி சீடனே, நீ குருவையும் மிஞ்சி விட்டாய். வித்தையில் நீ வல்லவன் இனி என்னால் உன்னைக் கொல்ல முடியாது நீ என்னை இப்பொழுது கொன்று விடாதே என்று கெஞ்சினார்.
வலி தாங்காமல் "என்னைக் காப்பாற்றுங்கள் என்னைக் காப்பாற்றுகள்" என்று கத்தினார் குரு. அரசனும் கூடியிருந்தோரும் இதென்ன வேடிக்கை என்று வியப்புற்றனர். பூனை உருவில் இருந்த ராஜகுமாரன் தன் வரலாறு முழுவதும் கூறினான்.
குருவுக்கு உயிர்ப் பிச்சை கொடு என்று அரசன் வேண்டிக் கேட்டுக் கொண்டான். பூனை உருவில் இருந்த ராஜ குமாரனும், கோழி உருவில் இருந்த குருவும் மனித வடிவம் எடுத்து ஒருவரையொருவர் ஆரத் தழுவினர்.
19
மூத்த ராஜகுமாரனை இளைய ராஜகுமார னோடு அனுப்பி வைத்தார் குரு. அவனுக்கு சகல கல்வி கலைகளைக் கற்றுக் கொடுத்தான் இளையவன். குரு தனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து வித்தைகளையும் அண்ணனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
தன்னைப் போலவே ஒரு திறமையான ராஜகுமாரனாக உருவாக்கினான் இளையவன். சிங்கிபுரத்தை போர்புரிந்து மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தான். தன் அண்ணனுக்கு பக்கத்து நாட்டு அரசிளங்குமரியை மணம் செய்து வைத்தான்.
ராஜகுமாரிக்கும் இளைய ராஜ குமாரனுக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. குரு காணிக்கை கேட்ட குருநாதர் கடைசியில் தனக்கே உயிர்பிச்சை கேட்க வேண்டிய நிலைமை வந்தது. இதைப் போன்ற குருவை மிஞ்சிய சீடரை நாம் காண்பது அரிதல்லவா.
20