நல்லவர்களை ஏமாற்றமுடியாது

    சிறிது காலத்துக்கு முன்பு ஞானி காசி நகரத்தின் நிதிக்கணக்கராய் இருந்தார். அப்போது பெரிய குடிக்கூட்டம் ஒன்று மதுவில் போதை மருந்தைப் போட்டு நிதிக்கணக்கரை ஏமாற்ற முடிவு செய்தது.

    அதன்படி மதுவில் போதை மருந்தைக் கலந்து விட்டு அவரிடம் சென்று, தங்களிடம் சிறந்த மது இருப்பதாகவும் உடன் வந்து தங்களுடன் சேர்ந்து பருக வேண்டும் என்றும் அவரை அழைத்தார்கள். நிதிக்கணக்கர் குடிப்பதில் விருப்பம் இல்லாதவர். இருப்பினும் குடியர்களின் அழைப்புக்கு இணங்கி அவர்களுடன் சேர்ந்து சென்றார்.

    குடியர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அவர். குடியர்களைப் பயமுறுத்தி விரட்டும் பொருட்டு ஒரு தந்திரம் செய்தார். அரண்மனைக்குப் போகும்போது குடிப்பது நல்லதன்று. அரண் மனைக்குச் சென்று அரசனைச் சந்தித்து விட்டுத் திரும்பி உங்களுடன் சேர்ந்து குடிக்கிறேன் என்று சொன்னார்.

    பிறகு அவர் திரும்பி வந்தபோது குடியர்கள் அவரை மது அருந்த அழைத்தார்கள். போதை மருந்து கலந்த மது வைத்திருந்த கிண்ணத்தைப் பார்த்த அவர். நீங்கள் நடந்துகொள்ளும் முறை

1

    எனக்குப் பிடிக்கவில்லை. நான் அரண்மனைக்குச் சென்றபோது நிரம்பி இருந்தபடியே மதுக்கிண்ணம் மதுவால் நிரம்பி இருக்கிறது. இந்த மதுவை நீங்கள் ஆயிரமாகப் புகழ்ந்து பேசுகிறீர்கள்.

    இருந்தும் இந்த மதுவில் ஒரு துளிகூட உங்கள் நாவில் நீங்கள் விட்டுப் பார்க்கவில்லை என்று தெரிகிறது. நீங்கள் கூறுவது போல் அது நல்ல மதுவாய் இருக்குமாயின் உங்களுக்கு உள்ள பங்கை நீங்கள் இதுவரை பருகி இருப்பீர்கள். ஆகவே இந்த மதுவில் போதை மருந்து கலந்து இருக்கிறது என்று கூறினார்.

2

முந்தைய கதை
அடுத்த கதை