ஓர் ஊரில் தச்சன் ஒருவன் இருந்தான். தான் செய்யும் மர வேலைக்காக மரம் வெட்டும் நோக்கில் நாள்தோறும் காட்டுக்குச் செல்வது வழக்கம். தச்சன் வழக்கமாகச் செல்லும் காட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அது மிகவும் நல்ல இயல்பு படைத்தது. ஆனால் தீய சிந்தனைகளின் உருவமாக அமைந்து விட்ட ஒரு நரியும் காக்கையும் சிங்கத்தின் நண்பர்களாக இருந்தனர்.
சிங்கம் நல்ல இயல்புகளைக் கொண்டிருந் தாலும் நரி காக்கை இவைகளின் துர்போதனை காரணமாக தானும் சில அநியாயச் செயலில் ஈடுபட்டு விடுவது உண்டு. ஒரு நாள் தச்சன் காட்டுக்கு மரம் வெட்டச் சென்றிருந்த போது எதிர்பாராத நிலையில் சிங்கம் மட்டும் தனியாக எதிரே வந்து விட்டது.
தச்சன் நடுநடுங்கிப் போய் விட்டான். இந்தச் சிங்கம் என்னை அடித்துப் போட்டுத் தின்று விடப் போகிறதே இன்று யார் முகத்தில் விழித்தோமோ என்று நெஞ்சு பதைபதைக்க தச்சன் தனக்குத் தானே கூறிக் கொண்டான். என்றாலும் மனத்திலே கடவுளைத் தியானித்துக் கொண்டு சிங்கத்தை நோக்கி நண்பனே உன்னுடைய நண்பனின்
1
மனைவி உனக்கு என்று சில தின்பண்டங்ளை செய்து அனுப்பியிருக்கிறாள். இதனை ஏற்று உண்டு மகிழ்ந்து என்னைக் கெளரவிக்க வேண்டும் என மிகவும் பவ்வியமாக மரியாதையுடன் கூறினான் தச்சன்.
தீய நண்பர்கள் அருகில் இல்லாததால் சிங்கம் தச்சனிடம் பெருந்தன்மையுடன் பழகத் தொடங்கியது. நண்பனே உன்னுடைய உணவு முறைக்கும் என்னுடைய உணவு முறைக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு.
நீ சோறு தின்னும் வழக்கமுடையவன். நானோ விலங்குகளின் இறைச்சியை உண்டு வாழ்கிறவன். இருந்தாலும் அன்புடன் தருவதால் உன்னுடைய உணவையும் நான் ருசி பார்க்கிறேன் என்று சிங்கம் சொன்னது.
தச்சனுக்குப் போன உயிர் திரும்பியது. தான் கொண்டு வந்திருந்த சுவையான பலகாரங்களைச் சிங்கத்துக்கு கொடுத்தான். அந்தப் பலகாரங்ளை ருசி பார்த்த சிங்கத்துக்கு முழு திருப்தி ஏற்பட்டது. நண்பா உன் வீட்டுப் பலகாரம் இவ்வளவு சுவையாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் நன்றாகத் தயார் செய்யப் பட்டிருக்கின்றது. இன்று முதல் நீயும் நானும்
2
நெருக்கமான நண்பர்களாகி விட்டோம். எந்த வித அச்சமும் இல்லாமல் நீ இந்தக் காட்டில் உலாவலாம். நீ காட்டிற்கு வரும்போதெல்லாம் அவசியம் என்னை சந்திக்க வேண்டும் என்று சிங்கம் கேட்டுக் கொண்டது.
தச்சன் மிகவும் மகிழ்ச்சியடைந்து சிங்கத்துக்கு நன்றி கூறினான். பிறகு நண்பனே, நான் உன்னை அன்றாடம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே ஆனால் என்னை சந்திக்கும் போது நீ மட்டுமே தனியாக இருக்க வேண்டும் என்று தச்சன் கேட்டுக் கொண்டான்.
அன்று முதல் அன்றாடம் காட்டுக்கு வரும் போதெல்லாம் தச்சனும், சிங்கமும் சந்தித்துக் கொண்டனர். தச்சன் வீட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மனைவியின் மூலம் தயார் செய்து கொண்டு வரும் பலகாரங்களை சிங்கத்துக்கு உண்ணக் கொடுப்பான். சிங்கம் அவற்றை விரும்பி உண்ணும். அவர்கள் நெடுநேரம் கலந்துரையாடுவர். பின்னர் இருவரும் பிரிந்து தம்தம் இடங்களுக்குச் செல்வர்.
சிங்கம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எங்கோ தனியாகச் செல்வதைக் கண்ட அதன் நண்பர்களான காக்கையும், நரியும் அது குறித்து ஒரு நாள்
3
சிங்கத்திடம் விசாரித்தன. நண்பர்களே எனக்கு ஒரு தச்சன் புதிய நண்பனாக வந்து வாய்த்திருக்கிறான். மிகவும் நல்லவன் என்மீது அன்பை பொழிகிறான். என் பொருட்டு அவன் மனைவி விதவிதமான பலகார வகைகளை செய்து அனுப்புகிறாள். அவை மிகவும் சுவையாக உள்ளன. நான் மிகவும் விரும்பி உண்ணுகிறேன் என்று சிங்கம் கூறியது.
நட்பில் தங்களுக்குப் போட்டியாக ஒருவன் வந்து விட்டான் என்ற தகவல் நரிக்கும் காக்கைக்கும் பொறாமை உணர்ச்சியைத் தூண்டிவிட்டன. அந்த நட்பை எவ்விதமாவது முறித்து விடவேண்டும் என எண்ணின.
நரி சொன்னது, நண்பனே இது என்ன பைத்தியக்காரத்தனமான நட்பு நம்மை போன்ற காட்டு விலங்குகள் ஒரு மனிதனுடன் எவ்விதம் நட்பாக இருக்க முடியும்? அந்த மனிதனை அடித்துக் கொன்று சாப்பிடுவது தான் நாம் உண்மையில் செய்யக்கூடிய ஒன்று ஆகும்.
சிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது. மடத் தனமாக உளறாதீர்கள் நண்பர்கள் என்றால் எல்லோரும் ஒரே மாதிரிதான் நட்புதான் முக்கியமே தவிர ஆள் முக்கியமல்ல. அவர்களுக்கு தீங்கு இழைப்பதைப்பற்றி நான் சிந்தித்ததே இல்லை
4
என்று கூறியது சிங்கம். நரியும், காக்கையும் அதற்கு மேல் ஒன்றுமே பேசவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த மனிதனைக் கொன்று தின்ன முயற்சிப்போம் என்று மனதில் நினைத்துக் கொண்டன.
பிறகு நரி, நண்பனே உன்டைய கருத்துக்கு மாறாக நாங்கள் பேச மாட்டோம். உன்னுடைய நண்பர்கள் எங்களுக்கும் நண்பர்களே! ஆகையால் உன்னுடைய நண்பர்களை நாங்களும் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறோம். தயவு செய்து மற்றொரு முறை நண்பன் வரும்போது எங்களையும் அறிமுகப்படுத்து எனக் கேட்டுக்கொண்டது.
அவ்விதமே செய்வதாக சிங்கம் வாக்குறுதி அளித்தது. மறுநாள் தச்சன் புதிய நண்பனை அறிமுகப் படுத்துவதற்காக தனது மனைவியையும் உடன் அழைத்து வந்தான்.
வழக்கமாக சிங்கத்தை சந்திக்கும் இடத்தில் தச்சன் மனைவியுடன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது சற்று தொலைவில் சிங்கமும் அதன் நண்பர்களான நரியும், காக்கையும் வந்து கொண்டிருப் பதை தச்சன் பார்த்து விட்டான்.
உடனே அவன் ஒரு பெரிய மரத்தில் தன் மனைவியை ஏற்றி விட்டுத் தானும் மரத்தின் மேல்
5
கொண்டான் மரத்தடிக்கு வந்த சிங்கம் தச்சன் வழக்கத்துக்கு மாறான அந்த செயலைக் கண்டு திகைப்படைந்தது.
மரத்தின் உயரத்திலிருந்த தச்சனை நோக்கி என்ன நண்பா இன்று உன்னுடைய நடவடிக்கை மிகவும் விசித்திரமாக உள்ளதே என்னை உனக்கு அடையாளம் தெரியவில்லையா? நான் உனது அருமை நண்பன் அல்லவா? என்னைக் கண்டு ஏன் பயந்து மரத்தின்மீது ஏறினாய்? என்று சிங்கம் கேட்டது.
நண்பா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் இல்லை. உன்னைக் கண்டு அச்சப் படவும் இல்லை. ஆனால் உன்னுடன் வந்திருக்கும் நண்பர்களை என் மனம் நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ இல்லை. அதனால் தான் தற்காப்புக் காகத்தான் மரத்தில் ஏறிக் கொண்டேன் என்று தச்சன் கூறினான்.
6