நாமதேவர்

    ஒரு சமயம், தீர்த்த யாத்திரை செய்து கொண்டே நாமதேவர் தில்லி வந்தடைந்தார். தில்லி மக்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அன்றிலிருந்து ஹரிநாம சங்கீர்த்தனம் தில்லியில் எதிரொலித்தது.

    மக்கள் லட்சக்கணக்கில் கூடி, நாமதேவருடன் சேர்ந்து கொண்டு நாம சங்கீர்த்தனம் சொல்ல ஆரம்பித்தனர். இந்த ஒலியைக் கேட்டு டில்லி பாதுஷா வெகுண்டார். நாமதேவரை எப்படியாவது அவமானப் படுத்த வேண்டுமென்று நினைத்தான்.

    ஒரு நாள் இரவு மக்கள் லட்சக் கணக்கில் நாம தேவரைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டிருந்தனர். பாதுஷா தன் குதிரையில் அங்கு சென்றான். நாமதேவருக்கு முன்னால் ஒரு பசுமாட்டை நிறுத்தி வைத்து அதைக் கொன்றான்.

    பசுவென்றால் இந்துக்களாகிய உங்களுக்கு உயிர் ஆச்சே. இதைப் பிழைக்க வையுங்கள் இல்லையேல் உங்களையும் கொல்லுவேன் என்று நாமதேவரைப் பயமுறுத்தினான். பசுவதையைக் கண்டு நாமதேவர் கதறிக் கதறி அழுதார்.

1

    பகவானே என் உயிரை எடுத்துக் கொண்டு இந்தப் பசுவுக்கு உயிரைக் கொடு. இல்லையேல் நான் உயிரை விட்டுவிடுவேன் என்று கதறி அழுதார். கடைசியில் மூர்ச்சையாய்க் கீழே விழுந்தார்.

    அப்போது பகவான் நாமதேவருக்கு முன்னால் பிரத்தியட்சமாகி நாமதேவா! எழுந்திரு. இதோ பசு உயிர் பெற்று, உன்னை நக்கிக் கொண்டிருக்கிறது பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

    நாமதேவர் கண்களை விழித்துப் பார்த்தால் பசு உயிர் பெற்று தம்மை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இதைக் கண்ட பாதுஷா நாமதேவரின் காலில் விழுந்து தங்கள் பெருமையை இப்பொழுது நான் உணர்ந்தேன். தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்றான்.

2

முந்தைய கதை
அடுத்த கதை