ஏரிக்கரையில் ஒருவன் நின்றிருந்தான். அவன் கையில் நிலைக் கண்ணாடி ஒன்று இருந்தது. கதிரவனுக்கு நேராகக் கண்ணாடியை பிடித்த அவன் அதன் ஒளிக்கதிர்களை ஏரி நீரை நோக்கி அடித்துக் கொண்டிருந்தான்.
அங்கு வந்த மற்றொருவன், கண்ணாடியை வைத்துக் கொண்டு ஏரி நீரில் என்ன செய்கிறாய்? என்று கேட்டான்.
"நான் மீன் பிடித்துக் கொண்டு இருக்கிறேன் தொல்லை தராதே" என்று சொன்னான் அவன்.
"என்ன? தூண்டில், வலை ஏதும் இல்லாமல் வெறும் கண்ணாடியை வைத்துக் கொண்டு மீன் பிடிக்கிறாயா? எப்படி?" என்று வியப்புடன் கேட்டான் வந்தவன்.
"ஆமாம் அண்மையில் கண்டுபிடிக்கபட்ட பெரிய கண்டுடிப்பு இது. இந்தக் கண்ணாடியைக் கொண்டு ஏராளமான மீன்கள் பிடிக்கலாம்.
சில நாட்களிலேயே நான் பெரிய பணக் காரனாகி விடுவேன்" என்று சொன்னான் அவன். கண்ணாடியை வைத்துக் கொண்டு எப்படி
1
தருகிறாயா? என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டான் வந்தவன்.
எளிமையான வழிதான் சொல்லித்தர நூறு ரூபாய் செலவாகும் என்றான் அவன்.
தன் பையிலிருந்து நூறு ரூபாயை எடுத்து அவனிடம் தந்தான் வந்தவன். எப்படிக் கண்ணாடியைக் கொண்டு மீன்களைப் பிடிப்பது விளக்கமாகச் சொல் என்று கேட்டான் வந்தவன்.
கதிரவனின் ஒளி ஏரியின் நீர் பரப்பிலே பிரதிபலிக்கும்படி இந்தக் கண்ணாடியை பிடிக்க வேண்டும்.
ஏதேனும் மீன்கள் ஒளிபடும் இடத்தில் இருந்தால் வெளிச்சத்தைக் கண்டு அவற்றின் கண்கள் கூசும்.
அதனால் எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் அந்த மீன்கள் திகைத்து நிற்கும். அவை தப்பிப்பதற்குள் அந்த மீன்களை உடனே பிடித்துக் கூடைக்குள் போட்டுவிட வேண்டும் என்று விளக்கினான் அவன்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் வந்தவன். நீ சொல்வது பைத்தியக்காரத்தனமாக. இருக்கிறதே.
2
இப்படிச் செய்து யாராலும் மீன் பிடிக்க முடியாதே. நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது. நீ இதுவரை எத்தனை மீன்களைப் பிடித்து இருக்கிறாய்? சொல் என்று கேட்டான். உங்களையும் சேர்த்து எட்டு என்று பதில் சொன்னான் அவன். வந்தவன் அதிர்ச்சியடைந்து அப்படியே நின்றான்.
3