பரந்த உள்ளம்

    ஊரில் ஒரு வருடமாக மழை பெய்யவில்லை. விவசாயம் நடக்கவில்லை. அதனால் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்த சுப்பையா பட்டினியும் பசியுமாக நாளை கழித்து வந்தான்.

    ஊர் மக்கள் ஞானியிடம் வந்து எனக்கு அது வேண்டும். "இது வேண்டும்" என்று கேட்டார்கள். அப்பொழுது சுப்பையா ஞானியிடம் வந்து சுவாமி உங்கள் அருளால் ஊரில் மழை பெய்யச் செய்யுங்கள் என்றான்.

    ஞானி புன்னகைத்து அப்பனே! எல்லோரும் சுயநலத்துடன் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டார்கள். ஆனால் நீ மட்டும் உனக்காக ஒன்றும் கேட்கவில்லையே!

    சுவாமி ஊரில் மழை பெய்தால் விவசாயம் நடக்கும். விவசாயம் நடந்தால் எனக்கு வேலை கிடைக்கும். வேலை கிடைத்தால் என் வறுமை தீரும் என்றான் சுப்பையா.

    ஞானி அவனை ஆசீர்வதித்து விட்டு ஊமக்களே! சுப்பையாவின் பரந்த உள்ளத்தைப் பார்த்தீர்களா? அவன் தனக்காக ஒன்றும் கேட்கவில்லை. ஊர் நன்மைக்காக மழை வேண்டும் .

1

    என்று கேட்டான். அவனுக்காகவே ஊரில் மழை பெய்யும் என்று கூறினார். அடுத்த கணமே மழை கொட்ட ஆரம்பித்தது. பஞ்சம் தெளிந்தது. சுப்பையாவால் ஊரே நன்மை அடைந்தது. இவ்வாறு நன்மை செய்த சுப்பையாவை அந்த ஊர் மக்கள் போற்றினார்கள்.

2

முந்தைய கதை
அடுத்த கதை