சீதாபுரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ரங்கன் யார் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவான். அதனால் அவனை எல்லோரும் ஏமாற்றுவார்கள்.
ஒரு நாள் கிருஷ்ணன் என்ற போக்கிரி ரங்கனிடம் நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய். பெரிய ராஜா குண்டு, சின்ன அரசர் செம்பு என்று ராஜாவிடம் சென்று சொன்னால் உனக்கு அரசர் 1000 வராகன் தருவார் என்றான்.
அதை நம்பிய ரங்கன் பல இடர்பாடுகளை சந்தித்து முடிவில் அரண்மனையை அடைந்தான். வழியில் மறந்து விடப்போகிறோம் என்று பெரிய ராஜா குண்டு சின்ன அரசர் செம்பு என்று சொல்லிக் கொண்டே வந்தான்.
இதைக் கேட்ட காவலர்கள் இதென்ன அரசர் இறந்துவிட்டார். இறந்தவரைப் போய் இவன் இப்படி சொல்கிறானே, இவனுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று யுவராஜாவிடம் இவனை அழைத்து போய் யுவராஜா இவன் உங்கள் தந்தையையும், உங்களையும் பழிக்கிறான் கேளுங்கள் என்றான்.
1
என்ன எனக் கேட்டால் "பெரிய ராஜா குண்டு சின்ன அரசர் செம்பு" என்றான். இதைக் கேட்ட இளவரசர் அரியணைலிருந்து விருட்டென எழுந்து வந்து இவனை இங்கேயே பார்த்துக் கொள்ளுங்கள் வருகிறேன் என்று போனார்.
பெரிய அரசர் இறக்கும் முன் 4 நாட்கள் முன்னாலே தன் மந்திரியிடம் நீ இளவரசனிடம் பெரிய ராஜா குணடு, சின்ன ராஜா செம்பு என்று சொல் என்று சொன்னார்.
மந்திரி சொல்வதற்குள் ராஜா இறந்து விட்டார். மந்திரி தன் மனைவிடம் இவ்விஷயத்தை சொன்னார். மந்திரியின் மனைவி ஊரெல்லாம சொல்லி விட்டார். ராஜா இறந்த இந்த நேரத்தில் எப்படி இளவரசரிடம் சொல்வது என்று மந்திரி சொல்லமல் இருந்து விட்டார்.
இளவரசர் தன் தந்தை தனக்கு சத்ருவாக உள்ளவர்களைப் பற்றி ஒரு தகவலும் நமக்கு சொல்லவில்லையே என்று பார்த்து ஏதேனும் ஓலை உள்ளதா என்று தேடிக்கொண்டிருந்த வேளையில் இவன் இப்படி சென்னான். பூஜை அறையில் உள்ள பெரிய செம்பை திறந்து பார்த்தான்.
அதில் பூஜை நீர் இருக்கும் என்று நினைத்து கவனிக்காமல் இருந்தான் இளவரசர்.
2
அதில் யார் யார் சத்ரு. அவர்களை எப்படி வென்று நாட்டை காப்பாற்றுவது போன்ற நாட்டின் ரகசியங்கள் கிடைத்தன. இளவரசர் மகிழ்ந்து போய் ரங்கனுக்கு தேவையான பொன், பொருள், ஆடை, உணவு எல்லாம் தந்து கெளரவித்து அவனை அங்கேயே வைத்துக் கொண்டார்.
3