இனி அமைச்சனாக இரு

    ஒரு ஊரில் கோவிந்தன் என்பவன் வாழ்ந்து வந்தான் அவன் அறிவுக் கூர்மையால் சூழ்ச்சித் திறனும் உள்ளவனாக இருந்தான். ஒரு நாளிரவு அவன் மனைவி நாம் உணவுக்கே வழி இல்லாமல் தவிக்கிறோம் நீங்கள் எங்காவது சென்று பொருள் ஈட்டி வாருங்கள் என்றான்.

    நான் என்ன முயற்சி செய்யாமல் இருக் கிறேன் ஒரு சிறு வாய்ப்பு மட்டும் கிடைத்தால் போதும் என் திறமையைப் பயன்படுத்தி கோடி கோடியாகக் சம்பாதித்து விடுவேன். ஆனால் வாப்புக் கிடைக்கவில்லையே. என்ன செய்வேன்? என்று பதில் தந்தான் அவன். அந்த வழியே மாறுவேடத்தில் வந்த அரசன் இருவர் பேசியதையும் கேட்டான். மறுநாள் கோவிந்தனை அரண்மனைக்கு அழைத்தான் அரசன்

    நேற்று நீயும் உன் மனைவியும் பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்டேன். பொருள் வருவாய்க்குச் சிறிதும் வாய்ப்பு இல்லாத ஒரு வேலை தருகிறேன். இன்று முதல் நீ நம் படையிலுள்ள யானைகள், குதிரைகள், மாடுகள்,

1

    ஆடுகள் ஆகிய விலங்குகள் ஒவ்வொன்றும் எவ்வளவு இலத்தியும் சாணமும், புழுக்கையும் போடுகின்றன என்று தனித்தனியே கணக்கிட வேண்டும். அதற்காக என் முத்திரையிட்ட ஆணையை பெற்றுக் கொள்.

    உன் திறமையைப் பார்ப்போம் என்று சொன்னான். அரசனிடம் ஆணையைப் பெற்றுக் கொண்ட கோவிந்தன் நேராகச் செல்வன் ஒருவனிடம் சென்றான்.

    அவனிடம் அரசனின் ஆணையைக் காட்டி இன்றியமையாத பணி ஒன்றை அரசர் என்னிடம் ஒப்படைத்து உள்ளார். எனக்கு ஆயிரம் பொற் காசுகள் தேவை.

    மூன்று மாதத்திற்குள் திருப்பித் தந்து விடுகிறேன் என்றான். செல்வனும் அப்படியே தந்தான். கோவிந்தன் அந்நகரிலே பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் குடியேறினான்.

    அரசன் தனக்கு இட்ட பணியைச் செய்வதற்கு ஏராளமான வேலைக்காரர்கள் தேவை என்றும் முதலிரண்டு மாதம் ஊதியம் கிடையாது என்றும் செய்தி பரப்பினான்.

    நிறையப் பேர் அவனிடம் வேலைக்குச் சேர்ந்தனர்.

2

    ஒருநாள் கோவிந்தன் தன் பணியாட்கள் புடைசூழ ஆரவாரத்துடன் யானைக் கூடம் குதிரை லாயம், மாட்டுத் தொழுவம், ஆட்டுப் பட்டி ஆகியவற்றைப் பார்வையிட்டான். பிறகு அங்கிருந்த வீரர்களை பார்த்து நாளையில் இருந்து கணக்கு எடுக்கும் வேலை தொடங்க இருக்கிறது.

    இங்குள்ள யானை, குதிரை, முதலியவை போடுகின்ற சாணங்களை எடுக்கவும் கூடாது. ஒன்றோடு ஒன்று கலக்கவும் கூடாது. ஒவ்வொரு விலங்கும் ஒரு நாளைக்குப் போடும் சாணத்தை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

    அப்பொழுது தான் இவ்வளவு உணவு உண்டிருக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு விலங்குகளுக்கு நீங்கள் தீனி போட்ட கணக்கை இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

    அதற்காகத்தான் அரசர் என்னை அனுப்பி உள்ளார் என்று சொல்லி விட்டுச் சென்றான். இதை கேட்ட அங்கிருந்த வீரர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். ஏனென்றால் அவர்கள் அந்தத் தீணியில் ரெும் பகுதியை தருகிறோம் என்று வேண்டிக் கொண்டனர்.

    கோவிந்தனும் அதற்கு ஒப்புக்கொண்டான். அவர்கள் கொடுத்த பணத்தில் சில நாட்களுக்குள் பெருஞ் செல்வன் ஆனான் அவன்.

3

    சில மாதங்கள் சென்றன. கோவிந்தனை அழைத்த அரசன், "இப்பொழுது எப்படி இருக் கிறாய்?". என்று கேட்டான். அதற்கு கோவிந்தன் நடந்ததை எல்லாம் கூறினான். "அப்படியா?" என்ற அரசன், நான் அந்தக் குற்றவாளிகளைத் தண்டி கிறேன் பொருள் வருவதற்கு வழியே இல்லாத வேறு ஒரு வேலையை உனக்குத் தருகிறேன்.

    இன்று முதல் நீ நம் அரண்மனையில் கட்டப் பட்டு இருக்கும் மணியைக் கால முறைப்படி அடித்து அதைப் பதிவு செய்து கொள். இதுதான் அதற்கான ஆணை என்று கொடுத்து அனுப்பினான்.

    அன்று முதல் கோவிந்தனும் இரவு முழுமையும் காலம் தவறாமல் மணி அடித்துக் கொண்டிருந்தான். இதில் பொருள் வருவாய்க்கு ஏதும் வழி இருக் கின்றதா என்று யோசித்தான்.

    நாள்தோறும் இரவில் அரசன் தன் மூன்று மனைவியர் இருப்பிடத்திற்கும் மணி ஓசையை வைத்துக் காலம் பிரித்துத் தங்கியிருந்தான்.

    கோவிந்தன் அரசனின் முதல் மனைவியின் வேலைக்காரியிடம், அரசர் நம் அரசியோடு அதிக நேரம் தங்க நான் ஏற்பாடு செய்கிறேன். அப்பொழுது மட்டும் நான் காலந்தாழ்த்தி மணி அடிக்கிறேன்.

4

    அரசியாரிடம் சொல்லி என்னை கவனிக்கும்படி சொல்லவும் என்றான். அதன்படி கோவிந்தன், அரசன் முதல் மனைவியிடம் தங்கி இருக்கும் போது மட்டும் காலந்தாழ்த்தி மணி அடித்தான் இதனால் மகிழ்ந்த அரசி அவனுக்கு பரிசுகளை அனுப் பினாள்.

    இதை அறிந்த அரசனின் மற்ற மனைவியரும் தங்கள் வேலைக்காரியைத் தனித்தனியே கோவிந்தனின் இருப்பிடத்துக்கு அனுப்பினார்கள்.

    எங்கள் அரசியிடம் அரசர் தங்கி இருக்கும் போது காலம் தாழ்த்தி மணி அடிக்க வேண்டும். அதற்காக இந்த அன்பளிப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு பரிசை கொடுத்துவிட்டு சென்றனர். இப்படியே பல நாட்கள் சென்றன.

    அரசன் ஒருநாள் கோவிந்தனை அழைத்து இப்பொழுது எப்படி இருக்கிறாய் என்று கேட்டான். முதலில் எனக்கு கொடுத்த வேலையை விட இப்பொழுது உள்ள வேலையில் அதிக தருவாய் கிடைக்கின்றது என்று கோவிந்தன் நடந்ததை எல்லாம் சொன்னான். மகிழ்ந்த அரசன் இவ்வளவு அறிவுள்ள நீ இனி என்னிடம் அமைச்சனாக வேலை செய் என்று சொல்லி அமைச்சர் பதவி தந்தான்.

5

முந்தைய கதை
அடுத்த கதை