பாண்டி தேசத்தில் பாதி பூங்கா என சொல்லலாம். ஏனென்றால் ஏராளமான மரங்களின் நடுவில் தான் அந்த ஊர். அங்கு மா, பலா, வெங்கை ஆல, அரச, நாவல் மரங்களும் என ஊரே பச்சை பசேல் என பசுமை போர்த்திக் கொண்டிருந்தது.
தெருவுக்கு இரண்டு புறமும் பெரிய நாவல் மரம் உள்ளது. பாண்டி தேசத்தில் பெரிய கடிகாரம் நான்கு புறமும் கலந்து வரும் தெருவாக இருப்பதால் அதிகமான ஜன நடமாட்டம் இருக்கிறது. வெய்யில் காலத்தில் நல்ல வெய்யில் நாவல் பழம் நிறைய உள்ளது.
கொஞ்சம் காற்றடித்தாலும் பழங்கள் கீழே உதிர்ந்து விழுகிறது. அந்த மரத்தின் மீது நான்கு குரங்குகள் வந்து சேர்ந்தது. அந்த கிளையை குரங்கு ஆட்டினால் பழங்கள் கிழே விழுகிறது.
தெருவில் போகும் பிள்ளைகள் பொறுக்கிச் செல்கிறார்கள். பக்கத்திலுள்ளவர்கள் சின்ன சின்ன கூடாரம் போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். மணிகள், சீப்புகள் எல்லாம் விற்க ஆரம்பித்தனர். இன்னொரு குடும்பம் அணில் தோலை விற்பனை செய்தனர். இன்னும் சிலர் சின்ன பொம்மைகள்
1
மரச்சாமான்கள் செய்து விற்றனர்.
அங்குள்ள நாவல் மரத்தின் கீழ் தேவகி தன் குழந்தையை கீழே படுக்க வைத்துவிட்டு மணி கட்டி விற்பனை செய்து கொண்டிருந்தாள். அதில் ஒன்றை அவள் குழந்தைக்கு போட்டு விட்டாள். அந்த குழந்தை மணியை வாயில் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும்.
அவர்கள் வாழ்க்கை மரத்தின் கீழே நடக்கிறது. ஒரு நாள் அங்கு ஒரு விந்தை நடந்தது. குழந்தையை விட்டு விட்டு எதிரில் உள்ளவர்களுடன் சண்டை யிட்டு கொண்டிருந்தாள் தேவகி. குழந்தை அழுது கொண்டிருந்தது. குழந்தையை யாரும் தூக்கி சமாதானம் செய்யவில்லை. குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.
ஒரு பையன் நாவல் பழங்கள் மீது பெரிய கல் எறிந்தான். அந்த கல் ஒரு குரங்கின் மேல் பட்டு அது இறங்கி குழந்தையின் கோணியை இழுத்து குழந்தையை தூக்கிக் கொண்டது. அதற்குள் அங்கு ஒரு மாட்டு வண்டி வேகமாக வந்து கொண்டிருந்தது.
குழந்தைக்கும் வண்டிக்கும் சிறிய இடைவெளி தான் இருந்தது. குழந்தை குழந்தை என எல்லோரும் கத்தினர். ஆனால் குழந்தையை தூக்கவில்லை. எல்லோரும் குழந்தை என்னவோ ஆகப்போகிறது
2
என பதட்டமானார்கள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென குழந்தையின் அழுகை நின்றது. அப்படி இப்படி குதிக்கும் குரங்கு வண்டியின் நடுவில் குழந்தையை வைத்து விட்டது. குழந்தையை காப்பாற்ற குழந்தை மீது படுத்துக் கொண்டது. இதைக்கண்ட இரட்டைமாடுகளும் கொஞ்சம் மிரண்டு தன் கால்களை விரித்து நகர்ந்தது.
மாடு குழந்தை மீதும் குரங்குமீதும் படாமல் சென்றது. அந்த காட்சியைக் கண்ட அனைவரும் அக்குரங்கை கடவுளாக புகழ ஆரம்பித்தனர். ஆஞ்சநேயர் குழந்தைகளின் தெய்வம். அதனால் ஆஞ்சநேயா தண்டகம் படிக்க சொல்கிறார்கள் பெரியவர்கள் உயிர் பயம் இருக்காது.
நோய் வராது. அப்பொழுது தாய் குழந்தையை எடுத்துக் கொண்டு அதனால் ஆஞ்ச நேயர் காப்பாற்றிய குழந்தை என்பதால் அஞ்சனா என பெயர் வைத்தேன் என்றாள். "ஜெய் ஆஞ்சநேயா" என எல்லோரும் வாழ்த்தினர்.
3