காட்டில் ஒரு மரத்தில் ஒரு பெண் கிளி வசித்து வந்தது. அதற்கு இரண்டு குஞ்கள் இருந்தன. ஒரு நாள் தாய்க்கிளி வெளியே சென்றிருந்த சமயம் அந்தப் பக்கம் வந்த வேடன் ஒருவன் இரண்டு கிளி குஞ்சுகளையும் பிடித்து ஒரு கூண்டில் அடைத்து எடுத்துச் சென்றுவிட்டான் போகும் வழியில் ஒரு குஞ்சு கூண்டிலிருந்து நழுவிக் கீழே விழுந்து விட்டது. வேடன் அதைக் கவனிக்காமல் போய் விட்டான்.
கீழே விழுந்த கிளிக்குஞ்சை வேடன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று வளர்த்து வந்தான். சில காலத்திற்குப் பிறகு அந்தக்காட்டுக்கு வேட்டையாட வந்த ஒரு மன்னன் வழி தவறித் தன் குதிரை மீது அமர்ந்தவாறு வேடன் குடிசை இருந்த பக்கமாக வந்துவிட்டான்.
அவனைக் கண்ட வேடன் வீட்டுக்கிளி ஐயா யாரோ ஒரு திருடன் குதிரை வருகிறான் அவனைப் பிடித்துக் கட்டுங்கள் - கொல்லுங்கள் என்று கூச்சலிட்டது. அந்தக் கூச்சலைக் கேட்டு அச்சமடைந்த அரசன் குதிரையை வேகமாக செலுத்தியவாறு அவ்விடத்தை விட்டு அகன்று முனிவரின் ஆசிரமம் இருக்குமிடத்திற்கு வந்தான்.
1
மன்னனைக் கண்ட முனிவரின் கிளி மன்னரே வாருங்கள் போதுமான அளவு உணவும் நீரும் இங்கு உள்ளது. உண்டு பசியாறுங்கள். முனிவர் அருகாமை யில்தான் சென்று இருக்கிறார். விரைவில் திரும்பி விடுவார் என மரியாதையுடன் சொன்னது.
அந்த இரண்டு கிளிகளுக்கு இடையே இருந்த பண்பு வித்தியாசத்தைக் கண்டு மன்னன் வியப்படைந்தான். அது குறித்து கிளியிடமே விசாரித்தான்.
தங்கள் வரலாற்றை மன்னுக்கு எடுத்தியம்பிய கிளி. என் சகோதரியான கிளி வேடனிடம் வளர்ந்ததால் அந்தச் சூழ்நிலைக்கேற்ப பண்பு அமைந்திருக்கிறது. நான் முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்ததால் உயர்ந்த பண்பினைப் பெற்றிருக் கிறேன் என்று கூறியது.
2