பெண்ணின் குழந்தைகள்

    அந்த பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள். 4 பையன், 1 பெண் குழந்தை பெரியவன் சூரியன், சந்திரன், பவுன், வீரன், தரணி அந்த பெண்ணுக்கு கிழடு தட்டியது. நான்கு மகனும் சம்பாதித்து தந்தால் மகள் சமைத்தால் அதை பெண் சாப்பிடுவாள்.

    இந்த மாதிரி வயதாகி கஷ்டப்பட்டு நச்சரிப்பு அதிகமாகி எல்லோரையும் திட்டி எல்லோருக்கும் இவள்மீது ஆசை குறைந்தது ஒருநாள் வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்தான் சூரியன். என்ன சூரியா எனக்கு உணவே சரியில்லை இன்று எனக்கு என்ன வாங்கி வந்தாய் என்றாள்.

    என்ன வாங்கி வருவது? என் வேலை செய்து முடிப்பதற்குள் எனக்கு பொறுமை போய்விடுகிறது. அதிலும் வெய்யில் காலத்தில் வேலை செய்ய முடியவில்லை. நான் உணவில்லாமல் சாகிறேன் நான் எங்கே வாங்கி வருவது. சந்திரன் இருக்கிறானல்லவா அவனிடம் கேள் என்று சென்றான். சரி நான் இப்படியே திட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றாள்.

    மறுநாள் சந்திரனிடம் நீயாவது எனக்கு சாப்பிட ஏதாவது கொடு. என் அண்ணன் சூரியன் உன் மகனையே

1

    கேள் உன்னை அவன்தான் கவனிக்க வேண்டும். பிறந்த முதலே நான் நோயாளி என்மனைவி கஷ்டப்படுகிறாள். மாதம் ஒரு தடவை யாவது உனக்கு பட்சணம் தான் தரமுடியும். என்னை நம்பாதே என்றான்.

    மூன்றாமவன் பவுன் வேகமாக வீட்டுக்கு வந்தான். அந்த வேகத்தை கண்ட அந்த பெண் என்ன அந்த ஆணவம், பெற்ற தாய்க்கு நல்ல உணவில்லை என்று நச்சரித்தாள். அம்மா என் விஷயம் உனக்கெப்படி தெரிகிறது. என் கஷ்டம் எப்படி தெரிகிறது.

    நான் ஒரு நிமிடம் நினைவில் கஷ்டம் எல்லாம் மறைந்து விடும். சின்ன தம்பி என்னிடம் வந்தா லொழிய தென்றல்காற்று வராது. எனக்கு என்ன ஆணவமா நான் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறேன். வீட்டில் இருக்க சொன்னால் இருக்கிறேன். இல்லை என்றால் போகிறனே என்றாள். மகள் தரணி வந்தாள். சமைக்க ஏதும் இல்லை ஒரு ஆழாக்கு நொய் இருக்கிறது. நாம் இருவரும் ஆளுக்கு ஒரு ஒரு டம்ளர் கஞ்சி குடித்து விடலாம் என்று இரண்டு டம்ளர் கொண்டு வந்து கொடுத்தாள். வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை

2

    திறந்தாள். எதிரில் வந்த ஜலவீரன் பசிக்கிறது. வீட்டில் என்ன இருக்கிறது என்றான். அதை கேட்ட அந்த பெண் கேட்க வெட்கமாயில்லை.

    என்னடா வீட்டுக்கு வந்து இரண்டு நாளாகிறது. வீட்டில் தாய் தந்தை இருக்கிறார்கள். என கேட்பியா ஏதாவது வரும்போது வாங்கிவர வேண்டும் என்ற எண்ண முள்ளதா உனக்கு?

    இதோபார் இதேபோல் பேசினால் நான் வீட்டுக்கு வருவதையே விட்டுவிடுவேன் என்றான். மகள் தரணி சமைக்க ஏதுமில்லை என கேட்டு இப்போதுதான் நாங்கள் கஞ்சி குடித்தோம் என்றாள். அப்பொழுதுதான் அவள் தன்தவற்றை உணர்ந்து மகன்களை திட்டுவதை நிறுத்தினாள். எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்தனர்.

3

முந்தைய கதை
அடுத்த கதை