சுவாமி தயானந்த சரஸ்வதி

    சுவாமி தயானந்த சரஸ்வதி விரஜாநந்தரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டு அவருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்து கொண்டிருந்தார். விரஜாநந்தர் குருடர். அவருக்கு ஸ்நானம் செய்ய யமுனா நதிக்கரை வரை நடந்து செல்வது கடினம் அதற்காகத் தயாநந்தர் தினம் பன்னிரண்டு குடம் தண்ணீர் யமுனா நதியிலிருந்து கொண்டுவந்து தம் குருவைக் குளிப்பாட்டுவார்.

    அவர் குடியிருந்த இடத்தைச் சுத்தமாகப் பெருக்கி வைப்பதும் தயாநந்தர்தான். ஒரு நாள் தயாநந்தர் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஒரு பக்கத்தில் இருந்த குப்பையைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். அந்தக் குப்பை அவர் கால் படவே விரஜாநந்தருக்கு ஏக கோபம் வந்துவிட்டது. அதற்காக தயாநந்தரை முதுகில் பளார் பளார் என்று அறைந்தார். அதற்கு தயாநந்தர் குருவைப் பார்த்து, "தயவு செய்து என்னை முதுகில் அடிக்காதீர்கள்.

    எனக்கு வலிக்குமே என்பதற்காகச் சொல்ல வில்லை அடிபட்டு அடிபட்டு என் முதுகு மறத்துவிட்டது. தங்களுக்கு கை வலிக்குமே என்று சொன்னேன்" என்றார்

1

முந்தைய கதை
அடுத்த கதை