ஒரு கிராமத்தில் விவசாயி நிலத்தை உழுதுகொண்டு இருந்தார். முன்பு இருந்த வியாபாரி ஒருவன் இந்த வயலில் ஒரு மனிதனின் தொடைப் பருமன் உள்ள தங்கக் கட்டி. மூன்று அடி நீளம் உள்ளதை புதைத்து வைத்தபின் இறந்து போனான்.
போதிசத்துவரின் ஏர்க்கால் இந்தத் தங்கக் கட்டியில் இடித்ததும் அது மரத்தின் வேராக இருக்குமோ என நினைத்தார். தோண்டிப் பார்த்த போது தங்கக்கட்டி என்பது தெரியவந்தது. உடனே ஒட்டி இருந்த மண்ணை அகற்றிச் சுத்தம் செய்தார்.
மாலை நேரம் வந்ததும் கலப்பையை வயலில் வைத்து விட்டு தங்கக் கட்டியைத் தனது தோளில் தூக்கிக்கொண்டு புறப்பட்டார். சுமையைத் தூக்கிக் கொண்டு அவரால் நடக்க முடியல்லை. ஆகவே என்ன செய்யலாம் என்று சிந்திக்கலானார்.
இவ்வளவு தங்கத்தைப் புதைத்து வைக்க வேண்டும். இவ்வளவு தங்கத்தைத் தான தருமம் செய்யவேண்டும். இவ்வளவு தங்கத்தை வாழ்க்கைச் செளகரியத்துப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதன்படி தங்கக்கட்டிகளை நான்கு கூறுகள் போட்டார். கூறுகள் போட்டதனால் தூக்கிச் செல்வது எளிதாயிற்று.
1
தங்கக் கட்டிகளை வீடு கொண்டு போய்ச் சேர்த்தார். இதன் பின்னர் தான தர்மங்களையும் இதர நற்காரியங்களையும் செய்தார். காலமானபின் தனது தகுதிகளுக்கு உரிய பலன்களை அனுபவித்தார்.
2