ஓரிடத்தில் பெரிய கட்டிடம் வேலை நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு உண்ணுவதற்காக வேலைக்காரர்கள் வெளியே சென்றிருந்த சமயம் சில குரங்குகள் அந்த இடத்திற்கு கூட்டமாக வந்தன. கட்டிடத்திற்கான மரவேலை நடைபெற்று வந்த இடத்திற்குக் குரங்கள் போய்ச் சேர்ந்தன.
அங்கே பெரிய மரம் சிறிதளவு பிளக்கப்பட்டு அதில் ஆப்பு ஒன்று சொருகி அடித்து வைக்கப் பட்டிருந்தது. அந்தப் பக்கம் பார்த்த ஒரு குரங்கு மற்றொரு குரங்கிடம் அதோ பார் அர்த்தமில்லாமல் ஒரு மரப்பிளவில் யாரோ ஆப்பைச் சொருகி வைத்திருக்கிறார்கள் என்று கூறியது.
அனாவசியிமாகச் சொருகப் பட்டிருக்கும் அந்த ஆப்பைப் பிடுங்கியெறியப் போகிறேன் என்று கூறியவாறு முதல் குரங்கு அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து ஆப்பைச் சிறுக சிறுக அசைத்து பிடுங்கலானது. ஆப்பு விடுபட்டதும் பிளவுபட்ட மரப்பலகை சடாரென்று ஒன்று சேர்ந்தது.
அதனுள் குரங்கின் வால் சிக்கிக் கொண்டது. குரங்கு தன்னுடைய வால் தனத்தினால் செய்த
1
வேலையால் வாலை எடுக்க முடியாமல் வேதனையில் வலியால் துடிதுடித்தது. அப்போது வேலையாட்கள் அங்கு வந்ததைப் பார்த்த மற்ற குரங்குகள் அவ்விடத்தை விட்டு ஓடி மறைந்தன. ஆனால் வால் மாட்டிக் கொண்ட குரங்கு மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கும் மிங்குமாக குதித்தது.
வேலையாட்கள் அந்த குரங்கு செய்த வேலையைப் பார்த்து கோபம் கொண்டு குரங்கை அடித்தே கொன்று விட்டு தூக்கியெறிந்து விட்டு தங்களது வேலையைத் தொடர்ந்தார்கள். குரங்கு தனக்கு தானே சாவை வரவழைத்துக் கொண்டு இறந்து போனது.
2