நாட்டுப் பற்று

    சத்ரபதி சிவாஜி பிரிட்டிஷ்காரர்களுடன் விரோதமாக போராடிய நாட்கள். ஒரு நாள் மாலை போர் முடிந்து தன் பரிவாரங்களுடன் குதிரைமீது வரும்போது ஒரு கிழவி மரத்தின் கீழ் உட்கார்ந்து அழுவது தெரிந்தது.

    என்ன பாட்டி போரில் உன் மகன் இறந்து விட்டான் என அழுகிறாயா என கேட்டான். அதற்கு கிழவி அய்யனே உன் ஆட்சியில் தேசத்துக் காக எவ்வளவோ பேர் போராடுகிறார்கள் அதில் என் மகனும் உள்ளான்.

    துரதிர்ஷ்டவசமாக நேற்று இழந்துவிட்டான். அன்றே நான் இரண்டு மூன்று பையன்களை பெற்றிருந்தால் தேசத்தை காக்க உதவுவார்கள் அல்லவா.

    இந்த வயதில் இன்னொரு மகனை பெற்றுத்தர முடியாதல்லவா அதனால் அழுகிறேன் என்றாள். அந்த கிழவியை கண்டு ஆச்சர்யப்பட்டான் சிவாஜி.

1

முந்தைய கதை
அடுத்த கதை