வாஷிங்டன் இந்து மதம் என்ற புத்தகத்தை பார்த்தான் சிறுவன். தன் பக்கத்து வீட்டில் உள்ள பெரியவரிடம் அந்த புத்தகம் உள்ளது. அவரிடம் சென்று ஒரு தடவை அப்புத்தகத்தை படிக்கிறேன் என்றான்.
அவர் அப்புத்தகத்தை கொடுத்தார். அவன் இரவில் அப்புத்தகத்தை படித்து உறக்கம் வந்தவுடன் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினான்.
ஒரு இரவு புயல் வந்து அந்த பையனின் வீட்டில் மேலிருந்து தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. அவனுக்கு நல்ல தூக்கம். அந்த நீரில் புத்தகம் நனைந்து விட்டது.
திடீரென விழித்து அப்புத்தகத்தை பார்த்து அவன் மிகவும் கஷ்டப்பட்டான். மறுநாள் அவன் வருத்தத்துடன் அந்த பெரியவரிடம் சென்று புத்தகம் நனைந்து விட்டது சார் அப்புத்தகத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றான்.
அவர் புத்தகத்தின் விலை சொன்னார். அவ்வளவு பணம் அவனிடம் இல்லாததால் அவன் எஜமான் நிலத்தில் மூன்று நாட்கள் வேலை செய்து புத்தகத்தின் விலையை
1
கொடுத்தான். பின்னர் இடைவிடாமல் வேலை செய்து புதுப்புது புத்தகம் வாங்கி சொந்தமாக படித்தான்.
அவன் யார் தெரியுமா? எல்லாருக்கும் தெரிந்த ஆப்ரஹாம் லிங்கன்தான். அவ்வளவு பிடிப்பு இருந்ததால்தான் வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறினான்.
2