தந்தையை கொன்ற மகன்

    ஒரு சமயத்தில் காசி நாட்டில் நீதிபதி ஒரு வியாபாரியாகப் பிறந்திருந்தார். காசி நாட்டின் எல்லைப்புறக் கிராமம் ஒன்றில் பல தச்சர்கள் வசித்தார்கள். அவர்களுள் ஒரு தச்சனின் தலை முழுவதும் வழுக்கையாய் இருந்தது.

    மரம் ஒன்றைப் பொறுக்கி எடுத்து மும்முரமாக அதில் அவன் வேலை செய்து கொண்டிருந்தபோது அவனுடைய வழுக்கைத் தலை பித்தளை சட்டிபோல் பிரகாசித்தது. அப்போது ஒரு கொசு அவன் தலைமீது உட்கார்ந்து அம்பு போன்ற தனது கொடுக்கால் அவனைக் கடித்துவிட்டது.

    தச்சனுக்குப் பக்கத்திலே அவன் மகன் உட்கார்ந்து இருந்தான் அவனிடம் மகனே! ஒரு கொசு என் தலைமீது உட்கார்ந்து என்னைக் கடிக்கிறது. அதை ஒரு அடி கொடுத்து விரட்டு என்று தச்சன் சொன்னான்.

    அதற்கு மைந்தன் அப்பா! அசையாமல் இருங்கள். ஒரு போடு போட்டு அதை நான் கொன்றுவிடுகிறேன் என்று கூறினான். இது சமயம் நீதிபதி வியாபாரத்தின் பொருட்டு தச்சன் கடைக்கு வந்திருந்தார். கொசுவை விரட்டி விடு என்று தந்தை கூறினான்.

1

    புதல்வன் தந்தைக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்தான். சரி அப்பா! என்று சொல்லி கொசுவைக் கொல்லும் பொருட்டு கூர்மையான ஒருகோடாரியால் தந்தையின் தலையில் ஒருபோடு போட்டான். தலை இரண்டாகப் பிளந்து தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோனான்.

    இந்தக் காட்சியைப் நீதிபதி நேரில் பார்த்தார். அசட்டு நண்பனை விட அறிவுள்ள பகைவன் மேல். ஏனெனில் அறிவுள்ளவன் பழிக்கு அஞ்சி பிறரைக் கொல்லாது ஒதுங்கிக்கொள்வான் என்று சொல்லியது.

    நீதிபதி அங்கிருந்து எழுந்து போய்விட்டார். காலமானபின் தனது செயல்கஞக்கு உரிய கதியை அவர் அடைந்தார். தச்சனின் உடலை உறவினர்கள் எடுத்துத் அடக்கம் செய்தார்கள்.

2

முந்தைய கதை
அடுத்த கதை