ராமுவும் சோமுவும்

    கதவைத் தட்டிய ஒருவர், "உள்ளே ராமு இருக்கிறானா?" குரல் கொடுத்தார். "ஐயா நீங்கள் யார்? எதற்காக ராமுவைத் தேடுகிறீர்கள்? என்று கேட்டான் கதவைத் திறந்தவன். நான் ராமுவிடம் ஒன்றைத் தர வேண்டும். அதற்குதான் தேடுகிறேன் என்றார் கதவைத் தட்டியவர்.

    "ஐயா நான் ராமுவின் உயிர் நண்பன் சோமு. அவனிடம் தருவதை என்னிடம் தாருங்கள். நான் ராமு வந்தவுடன் தந்து விடுகிறேன்" என்றான் சோமு. "அது நல்லா இருக்காது, ராமுவிடம் நேராகத் தர வேண்டும். அதற்காகத்தான் வந்தேன். நான் பிறகு வந்து அவனைப் பார்க்கிறேன் என்றார் அவர்.

    "எதுவாக இருந்தாலும் என்னிடம் தாருங்கள். நான் மிகவும் நல்லவன். ராமு வந்தவுடன் நீங்கள் தந்ததை அப்படியே தந்து விடுகிறேன்" என்று வற்புறுத்தினான் அவன். "உங்களிடம் அதைத் தரக் கூடாது. அது நன்றாக இருக்காது" என்றார் மீண்டும் அவர்.

    "கவலைப்படாமல் என்னிடம் தாருங்கள், நான் அவனிடம் அதை அப்படியே தந்து விடுகிறேன்" என்று மீண்டும் மீண்டும் கேட்டான் சோமு.

1

    "வேறு வழியில்லை" என்ற அவர் சோமுவின் கண்ணத்தில் ஓங்கி ஒரு அரை கொடுத்தார். அவன் கண்ணமே வீங்கி விட்டது. "எதற்காக என்னை அடித்தீர்கள்?" என்று அழுது கொண்டே கேட்டான் அவன்.

    "ராமு என்னைப் பற்றி தாறுமாறாகப் பேசிக் கொண்டிருப்பதாகப் கேள்விபட்டேன். அவன் கண்ணத்தில் ஒரு அறை கொடுப்பதற்காக அங்கு வந்தேன். நீ இருந்தாலும் என்னிடம் தாருங்கள், அப்படியே தந்து விடுகிறேன் என்று வற்புறுத் தினாய்.

    அதனால்தான் உன்னை அறைந்தேன். பக்கத்து தெரு கபிலன் தந்ததாகச் சொல்லி நான் தந்ததை அவனிடம் தந்து விடு" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அவர்.

2

முந்தைய கதை
அடுத்த கதை