ஒரு சமயம் ஞானி பணக்காரக் குடும்பம் ஒன்றில் பிறந்திருந்தார். நன்மை தீமைகளை வேறு படுத்திக் காணும் அறிவுத் திறன் அவருக்கு ஏற்பட்ட போது பேராசையால் விளையும் துயரத்தையும் அதைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் ஆனந்தத் தையும் அவர் தெரிந்துகொண்டார்.
ஆசைகளை விட்டொழித்து, இமயமலை சென்று அவர் துறவி ஆனார். தியானத்தில் ஈடுபட்டார். ஐந்துவகை மேலான ஞானத்தையும், எட்டுவகைப் பேறுகளையும் அவர் பெற்றார். ஆன்மீக உள்ளுணர்வு வாழ்க்கையில் அவர் திளைத்தார். ஒரு காலத்தில் ஐநூறு துறவிகளுக்கு அவர் தலைமைத் துறவியாக விளங்கினார்.
இது சமயம் ஒரு நாள் தனது இயல்புப்படி சுற்றித் திரியும் நச்சுப் பாம்பு ஒன்று ஒரு துறவியின் குடிலுக்கு வந்தது. அந்தக் குடிலைச் சார்ந்த பிச்சைக் காரன் அந்தக் குட்டியைத் தனது குழந்தை போல் நினைத்து அன்பு செலுத்தினார்.
மூங்கில் கழிகளை இணைத்து ஒரு பெட்டி செய்து அதற்குள் அந்தப் பாம்புகுட்டியைத் தங்கச் செய்தார். மூங்கில் கழிகளுக்கு இடையே தங்கிய தனால் அந்தப் பாம்புக் குட்டிக்கு மூங்கில் என்ற
1
பெயர் எற்பட்டது. அதைத் தன் குழந்தைபோல் மிக்க நேசத்தோடு முனிவர் வளர்த்ததனால் அவருக்கு மூங்கிலின் தந்தை என்ற பெயர் உண்டானது. இவர் பாம்புக் குட்டியை வளர்ப்பது ஞானிக்கு தெரியவந்தது.
உடனே அவரை அழைத்துவரச் செய்து பாம்புக் குட்டியை வளர்ப்பது உண்மைதானா என்று கேட்டார். ஆம் என்று முனிவர் தெரிவித்ததும் நச்சுப் பாம்புகளை ஒருபோதும் நம்பலாகாது.
அதை வளர்க்க வேண்டாம் என்று சொன்னார். அந்தப் பிச்சைக்காரன் சம்மதிக்கவில்லை. ஆசிரியர் சீடனை நேசிப்பதைப் போல இந்தப் பாம்புக் குட்டியை நான் நேசிக்கிறேன். அதைப் பிரிந்து என்னால் வாழ முடியாது என்று கூறினார். பிச்சைக்காரன் சொன்னதைக் கேட்ட ஞானி இந்தப் பாம்பினால்தான் உமது உயிருக்கு ஆபத்து நேரும். இதைத் தெரிந்து கொள் என்று கூறினார்.
ஆசான் எச்சரித்தும் அந்த பிச்சைக்காரன் கேட்கவில்லை. பிரிய மனம் இல்லாது அந்தப் பாம்பை செல்லமாக வைத்துக் கொண்டார். சில தினங்களுக்குப் பின்னர், கனிகள் சேகரிக்க பிச்சைக் காரர்கள் சென்றார்கள். ஒர் இடத்துக்கு அவர்கள் போனபோது அங்கு பல்வகையான பழங்கள் இருந்தன.
2
அதனால் அவற்றைச் சேகரிக்ம் பொருட்டு, இரண்டு மூன்று தினங்கள் இங்கேயே தங்கினார்கள். மற்ற பிச்சைக்காரர்களும் கனிகள் சேகரிக்க அங்கேயே தங்கினார்கள். மூங்கில் தந்தையும் அவர்களுடன் சென்றார்.
அதனால் பாம்புக் குட்டி மூன்று நான்கு தினங்கள் இரை இல்லாது மூங்கில் பெட்டிக்குள்ளே கிடக்க வேண்டியதாகியது. இரண்டு தினங்களுக்குப் பின் திரும்பிய அவர் பாம்புக் குட்டி பசியாய் இருக்குமே என்று கருதி மூங்கில் கழிப்பெட்டியைத் திறந்து மகனே! உனக்குப் பசியாய் இருக்குமே.
வெளியே வா என்று கையை நீட்டினார். இரண்டு தினங்களாகப் பசியுடன் இருந்த பாம்புக்குட்டி, அந்தப் பிச்சைக்காரரைக் கடித்துவிட்டு, தப்பி காட்டுக்குள் ஒடிவிட்டது. முனிவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.
பிச்சைக்காரர் இறந்து கிடப்பதைப் பார்த்த மற்றர்கள் ஞானியிடம் வந்து தெரிவித்தார்கள். அவருடைய உடலை அடக்கம் செய்யும்படி ஞானி சொன்னார். தம் சீடர்களுக்கு இவ்வாறு ஞானி அறிவுரைகள் கூறினார். பிறகு மேலான நான்கு நிலைகளை அவர் அடைந்தார். காலமான பின்னர் பிரம்ம லோகத்தில் அவர் பிறந்தார்.
3