நல்ல பாடம்

    குருநாதன் என்ற பணத்தாசை பிடித்தவன் ஒரு கிராமத்தில் இருந்தான். அவன் ஊர்மக்களை ஏமாற்றி மாயை வார்த்தைகளை பேசி மயங்கும் போது அவர்கள் பத்திரங்கள், நிலங்கள் ஆகியவற்றை எழுதி வாங்கிக் கொள்வான்.

    ஊரை மோசம் செய்து பணம் சம்பாதித்து சேர்த்து வைத்தான். லட்ச லட்சமாக சேர்த்தும் அவன் ஆசை அடங்கவில்லை. இன்னும் அதிகம் சேர்க்க ஆசை. அவனுக்கு ஒரே மகன் இருந்தான்.

    வளர்ந்து வாலிபனானான். அவன் தந்தைபற்றி தெரிந்ததால் அவனுக்கு யாரும் பெண் கொடுக்க வில்லை மறுத்தனர்.

    வரதட்சணை தந்து திருமணம் செய்ய யாரும் முன்வர வில்லை. யாராவது வந்தாலும் ஊர் மக்கள் தடுத்து விடுவார்கள்.

    இப்படியிருக்கும் போது ஒரு நாள் ராமன் என்ற ஒரு வியாபாரி வந்தான். அவனுக்கும் குருநாதனைப் பற்றி மிகவும் நன்றாக தெரியும். அவன் மகனைப் பற்றியும் தெரியும். அதனால் நான் என் ஐந்து ஏக்கர் கரும்பு தோட்டத்தை எழுதி வைத்து.

1

    என் பெண்னையும் உன் மகனுக்கு திருமணம் செய்கிறேன் என்றான். குருநாதனுக்கு மனதில் நிறைய சந்தோஷம்.

    வெளிகாட்டாமல் திருமணம் ஆன மறு நிமிடமே எழுதி கொடுக்க வேண்டும் என்றான். சரியென ஒப்புகொண்டு அந்த நிமிடமே வெற்றிலை பாக்கு பரிமாறி விட்டார்கள்.

    திருமணத்தை வெளியில் சொன்னால் யாராவது கெடுத்து விடுவார்கள் என்று குருநாதன் யாரிடமும் சொல்லாமல் முக்கியமாக வேண்டிய நால்வருக்கு மட்டும் சொல்லி திருமணம் எளிமையாக நடத்தினான். கரும்பு தோட்டம் பத்திரம் வர தட்சணையாக தருவதாக சொன்ன ராமன் கரும்பை மட்டும் அனுப்புவதாக பத்திரம் எழுதி கொடுத்தார்.

    அதைக் கண்ட குருநாதன் கொதிப்படைந்தான். என்னை மோசம் செய்கிறாயா என்று கத்தினான்.

    பின்னர் ராமன் நிதானமாக நீ ஊரில் எவ்வளவு பேரை மோசம் செய்தாய் எவ்வளவு பேர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் உன்னால். நீ அதை உணர வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன்.

2

    உன்னை மோசம் செய்ய அல்ல என கூறி உண்மையான பத்திரத்தை வரதட்சணையாக கொடுத்தார். நீ யாரையாவது ஏமாற்றினாலோ அல்லது மகன், மருமகளை துன்புறுத்தினாலோ உன் எல்லா சொத்துக்களும் எனக்கு வந்து விடும். ஜாக்கிரதை என்ன சொன்னபடி நடந்து கொள்கிறாயா என்றான்.

    குருநாதன் தன் செயலுக்கு தலைகுனிந்து வெட்கப்பட்டு வேதனை அடைந்தார். பின்னர் இறுதி காலத்தில் நல்லவனாக இருந்து காலத்தை கழித்தார்.

3

முந்தைய கதை
அடுத்த கதை