உரியவன் கேட்டால்

    மதகுரு மீர் பகலெல்லாம் பள்ளியில் உட்கார்ந்து வேதாந்த விஷயங்ளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். தம்முடைய இரண்டு பிள்ளைகளும் அங்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்தார். ஆனால் அவர்களைக் காணவில்லை.

    அவர்கள் எப்படி அங்கே வருவார்கள் அவர்கள்தான் அவர் பள்ளியில் இருந்த சமயம் இங்கு வீட்டில் இறந்து விட்டார்களே இறந்துவிட்ட இரண்டு யுவர்களின் சடலங்களையும் ஸ்ரீமதி மீர் தன்னுடைய படுக்கை அறைக்கு எடுத்துச் சென்று கட்டிலில் கிடத்தினாள், பிறகு ஒரு வெள்ளை விரிப்பைக் கொண்டு அவர்களைப் போர்த்தினாள்.

    மாலையானதும் மதகுரு மீர் தம் பள்ளியி லிருந்து திரும்பி வந்தார். எங்கே என் இரண்டு பிள்ளைகளும்? அவர்களை நான் பள்ளியில் பார்க்கவில்லையே! என்று கேட்டார். எங்காவது சென்றிருப்பார்கள் வந்து விடுவார்கள்.

    முதலில் இதைக் குடியுங்கள் என்று அவர் குடிக்க ஏதோ கொடுத்தாள். அதை குடித்துவிட்டு சாப்பட வேண்டுமே, எங்கே என் இரு பிள்ளைகள் என்று கேட்டார். எல்லாம் வந்து விடுவார்கள் நீங்கள் முதலில் சாப்பிடுங்கள் என்று அவருக்கு சாப்பாடு போட்டாள்.

1

    அவர் சாப்பிட்டு முடிந்ததும், ஸ்ரீமதி மீர் உங்களை ஒன்று கேட்க வேண்டும். சொல்வீர்களா! என்று கேட்டாள். என்ன கேட்க வேண்டும். கேளேன்! என்று சொன்னார் மீர். சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் தன் நகைகளை என்னிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

    இப்பொழுது அவற்றைத் திருப்பிக் கேட்கிறார். நான் கொடுப்பதா, வேண்டாமா? என்று கேட்டாள். வெகு அழகாக இருக்கிறதே, நீ கேட்பது! நகைக்கு உரியவன் கேட்டால் நீ அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதுதானே நியாயம்?

    அதை எப்படி மாட்டேன் என்று சொல்ல முடியும்? இருந்தாலும் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டுத் திரும்பிக் கொடுக்கலாம் என்று நினைத்தேன் என்று அவரைத் தன் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள்.

    இரு பிள்ளைகள் மீது விரித்திருந்த வெள்ளை விரிப்பை எடுத்ததும் மீர் ஆ! என் பிள்ளைகளே என்று ஆழ ஆரம்பித்தார் எதற்காக அழ ஆரம்பித் தீர்கள்? சொந்தக்காரன் கேட்டால் நான் திருப்பிக் கொடுக்க வேண்டியதுதான் என்று இப்பொழுதுதானே சொன்னீர்கள் என்றாள் ஸ்ரீமதி மீர்.

2

முந்தைய கதை
அடுத்த கதை