விநாயகர் ஒரு நாள் ஒரு விருந்துக்கு சென்றார். அங்கே கொழுக்கட்டையும், உணவும், தேங்காயும் நிறைய வயிறு புடைக்க தின்று விட்டு நடக்க முடியாமல் அடிமேல் அடி எடுத்து வைத்து நடந்தார். அதற்குமேல் மூஷிகன் நடக்க முடியாமல் நடந்தான்.
விநாயகனை முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்க முடியாமல் அடிமேல் அடி எடுத்து வைத்து வந்துக் கொண்டிருந்தான். வழியில் ஒரு பெரிய சர்ப்பம் வந்துக் கொண்டிருந்தது. அது மிக பசியுடன் இரைதேடிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. வழியில் பாம்பை பார்த்த மூஷிகன் பயந்து போய் விநாயகரை உருட்டி கீழே தள்ளி விட்டு ஓடி ஒளிந்துக் கொண்டான். வயிறு பிளந்த விநாயகர் என்ன செய்வதேன தெரியாமல் பாம்பை பிடித்து இழுத்து இடுப்பை சுற்றி கட்டி கொண்டார்.
பாம்பு சுவாமி நான் உங்களை என்ன செய்தேன் ஏன் என்னை இப்படி கட்டிப் போட்டீர்கள் நான் இரை தேடி போய் கொண்டிருந்தேன் என்றது.
என் வயிறு கிழிந்து வட்டது. அதனால் தான் அந்த எலி உன்னை கண்டதும் என்னை கீழே தள்ளி விட்டு ஓடிவிட்டது. நான் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கையில்லை அதற்கு.
1
நீ பயப்படாதே என்னுடன் இரு என்னை வழிபடும் பக்தர்கள் எனக்கு படைப்பார்கள். அதெல்லாம் உனக்கு தருகிறேன் நீ என்னுடனே இருந்துவிடு என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள். உனக்குப் நற்கதி கிடைக்கும், நீ அவர்களுக்கு அபயம் கொடுப்பதுபோல இரு என்று சொன்னார். பாம்பு மகிழ்ந்து நான் நல்ல புண்ணியம் செய்தேன். அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய பேறு ஏற்பட்டது என்று வணங்கி விநாயகருடனே இருந்து விட்டது.
2