தந்திரத்தால் சாதித்தது

    அறிஞர் ஒருவர் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே நின்றிருந்த ஒரு முரட்டுப் பையன் தன்னைவிட சின்னதாக வருபவர் மீது எல்லாம் கல் எறிந்துக் கொண்டிருந் தான். அவன் எரிந்த கல் சரியாக அறிஞரின் தலையில் வந்து விழுந்தது.

    வலி பொறுக்க முடியாத அவர் திரும்பி பாத்தார். அவனோ எதற்கும் கவலைப் படாதவன் போல நின்றிருந்தான். இப்பொழுது இவனிடம் சண்டை செய்தால் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்த அவர் தன் வழியே சென்றார்.

    மறுநாள் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த அறிஞரின் கண்ணுக்கு சிறிது தொலைவில் கொடுவாள் மீசையும், பெருத்த உருவமும் கொண்டு முரடன் ஒருவன் வருவது தெரிந்தது. உடனே அவர் அந்தப் பையன் இருந்த சாலை வழியாகப் போனார்.

    வழக்கம் போல் பையன் குறி வைத்து எறிந்த கல் அவர் தலையில் விழுந்தது. வலி இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு அவர் சிரித்த முகத்துடன் பையனை அழைத்தார். எதற்கும் கவலைப்படாத அவனும் அருகில் வந்தான்.

1

    உடனே அவர் தன் பையில் இருந்த சில்லறைக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தார்.

    நானும் சில நாட்களாக உன்னைப் பார்க் கிறேன். குறி பார்த்து அடிப்பதில் நீ கெட்டிக்காரனாக இருக்கிறாய். நீ வைத்த குறி தவறுவதே இல்லை. இதை என் பரிசாக வைத்துக்கொள்.

    அதோ பார் தொலைவில் ஒருவர் வருகிறாரே அவர்தான் என் குரு. அவருக்கு உன்னைப் போல குறி பார்த்து அடிக்கிற பையன்களை மிகவும் பிடிக்கும் என்னைப் போல் சில்லறையாகத் தராமல் பெரும் பரிசாகத் தருவார்.

    அவர் உன் பக்கத்தில் வருவதற்குள் குறைந்தது. மூன்று முறையாவது குறி தவறாமல் அவர் தலையில் கல்லால் அடித்து விடு. நான் வருகிறேன் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

    அவர் சொன்னதை உண்மை என்று நம்பிய அந்தப் பையன் கையில் நான்கைந்து கற்களுடன். தயாராக இருந்தான்.

    அந்த முரடன் அருகே நெருங்க நெருங்க குறி வைத்துத் தலையில் அடித்தான் வழக்கம் போல் குறி தவறவில்லை. கோபம் கொண்ட முரடன் என்னிடமே வாலாட்டுகிறாயா நான் யார் என்று

2

    காட்டுகிறேன் என்று கத்தியபடி சிறுவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

    அவன் முகத்தில் ஓங்கிப் பல குத்துகள் விட்டான். படுகாயம் அடைந்த அந்தப் பையன் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்தான். அவன் செய்த தவறுக்கு அவனுடைய வழியிலேயே தந்திரத்தால் அவனை பழிக்குப் பழி வாங்க வைத்துவிட்டார் அறிஞர்.

3

முந்தைய கதை
அடுத்த கதை