முரசால் ஏமாந்த நரி

    ஒரு காட்டில் பசியால் வாடிய நரியொன்று இரை தேடி அலைந்தது. வெகு நேரம் சுற்றிச் சுற்றி வந்தும் எந்த இரையும் கிடைக்கவில்லை. காட்டுப் பகுதியில் வேட்டையாடத் தன் பரிவாரங்களுடன் வந்த ஓர் அரசன் திரும்பிச் செல்லும் போது ஒரு முரசை விட்டுவிட்டுச் சென்று விட்டான்.

    முரசு ஒரு பாறையின் உச்சியில் கிடந்தது. நரி அந்த முரசுக்கு அருகாமையில் சென்ற சமயம் முரசிலிருந்து பெரிய ஓசை எழுந்தது. தாழ இருந்த மரக்கிளைகள் காற்றடிக்கும் போது முரசின் மீது மோதுவதன் காரணமாகவே அந்த ஓசை எழுந்தது.

    அந்த ஓசையைக் கேட்டு நரி கிடு கிடுவென நடுங்கி, "ஐயோ, ஏதோ ஒரு பயங்கர மிருகம் கர்ஜிக்கின்றதே என் உயிருக்கு ஆபத்து வந்து விட்டதே" என்று கூச்சலிட்டது. முரசு அதன் கண்ணில் பட்டது. அது தான் சற்று முன் முழக்க மிட்ட விலங்கு என்று தீர்மானித்துக் கொண்டது.

    முரசு அசையாமல் கிடப்பதைக் கண்ட நரி அதன் அருகே சற்று துணிச்சலுடன் சென்றது முரசி டமிருந்து. எந்தவித பிரதிபலிப்பும் இல்லாதைக் கண்ட நரி ஏதோ ஒரு விலங்கு மயங்கிக் கிடக்கிறது.

1

    நமக்கு பசிக்கு நல்ல இரை கிடைத்தது. இந்த விலங்கிடமிருந்து நிறைய கொழுப்பும் இறைச்சியும் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்ட நரி, முரசை நெருங்கி அதன் மேல் தோலைக் கிழித்துத் தின்றது.

    பிறகு முரசின் உட்புறம் பார்த்தால் கொழுப்போ, இறைச்சியையோ காணவில்லை. வெறும் காலி இடமாகத் தான் இருந்தது. ஏமாற்றமடைந்த நரி வயிற்றெரிச்சலுடன் தன் வழியே சென்றது.

2

முந்தைய கதை
அடுத்த கதை