திருடிய மோதிரம்

    சத்தியன் என்ற வைர வியாபாரி இருந்தான். அவனிடம் ஒருவன் மூன்று வைர மோதிரங்கள் விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தினான்.

    சத்தியன் ஒரு ஐயாயிரம் ரூபாய் என்று விலை கொடுத்து வாங்கி ஒன்றை விற்று விட்டான். மற்றொன்று மனைவி சத்யகலாவிற்கும், மூன்றாவது வியாபாரம் செய்யவும் வைத்திருந்தான்.

    ஒருநாள் திடீரென்று அந்த மோதிரம் காணாமல் போய்விட்டது. அதைக் கண்டு சத்தியன் அந்தக் கடையில் வேலை செய்யும் கோவிந்தன் நாராயணனிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால் மிகவும் ஆபத்து என்று கூறினார். அவர்கள் எதற்கும் மசியவில்லை. ஞாயிற்றுக் கிழமை நண்பன் நாகலிங்கத்தின் செல்ல மகன் சோம சேகரனின் பிறந்த நாள் விழா. தனக்கு வேலையிருப்பதால் தன் மனைவி சத்யகலாவை அனுப்பி வைத்தான். அவரும் பரிசுகள் வாங்கிக் கொண்டு சென்றார். வைர மோதிரத்தையும் அணிந்து சென்றார். வடை, பாயாசத்தோடு விருந்து நடந்தது.

1

    பக்கத்தில் உட்கார்ந்த பத்மாவை நன்றாகத் தெரியும். அவள் கோவிந்தன் மனைவி. அவள் ஒரு வைர மோதிரம் போட்டிருந்தாள். இதன் விலை என்ன வென்று கேட்க எனக்கு ஒன்றும் தெரியாது. என் கணவர்தான் இதை வாங்கிக் கொடுத்தார் என்றாள். இரு வைர மோதிரங்களும் ஒரே மாதிரி டிசைன் களில் இருந்தது.

    சத்தியகலா உடனே வீட்டிற்குப் புறப்பட்டு கணவன் சத்தியனிடம் சங்கதிகளைக் கூறினாள். திருட்டுப் பயல் இப்படியா செய்தான். அவனை என்ன செய்கிறேன் பார் என்று கோபமாக கோபித்து வீட்டை அடைந்தான்.

    எஜமான் திடீரென்று வந்ததைக் கண்டு திடுக்கிட்டான். பிறகு வைர மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து மன்னிக்க வேண்டும். இனி இதுபோல் நடக்க மாட்டேன். நான் வணங்கும் தெய்வத்தின் மீது ஆனை என்றான்.

2

முந்தைய கதை
அடுத்த கதை